செய்திகள்

சவுதியில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள், தமது அடையாள அட்டையை, காலாவதியாவதற்கு முன்னர், புதுப்பித்துக் கொள்ள வேண்டும்

சவுதி அரேபியாவில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள்தமது அடையாள அட்டையைகாலாவதியாவதற்கு முன்னர்புதுப்பித்துக் கொள்ள வேண்டுமென அந்நாட்டின் உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. காலாவதியான பின்னர்அடையாள அட்டையைப் புதுப்பிக்கும் போது தண்டப்பணமாக 500 றியால் அறவிடப்படவுள்ளது. இதேவேளைஇரண்டாவது முறை இவ்வாறான தவறு இடம்பெறுமிடத்துஅடையாள அட்டையைப் புதுப்பிப்பதற்கு ஆயிரம் றியால் தண்டப்பணம் அறவிடப்படும் என்று அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. எனவே வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அடையாள அட்டையின் காலாவதி தினம் தொடர்பில் கவனம் செலுத்துமாறும்காலாவதியாகும் திகதி முடிவடைவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர்அதனைப் புதுப்பித்துக் கொள்ளுமாறும் சவுதி அரேபிய உள்துறை அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.