செய்திகள்

குவாத்தமாலா எரிமலையில் காணாமல் போனவர்களை தேடிக்கண்டுபிடிக்கும் முயற்சி

குவாத்தமாலாவில் நேற்று முன்தினம் நிகழ்ந்த பயங்கரமான எரிமலைக் குமுறலைத் தொடர்ந்து காணாமல் போனவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்தப் பணிகளில் தீயணைப்புப் படைவீரர்களுக்கு முப்படையினர் உதவி வருவதாக பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது. ஃபுவெகோ என்ற எரிமலையில் இருந்து வீசியெறியப்பட்ட எரிகற்களும், புகையும் தொலைதூரத்தில் இருந்த கிராமங்களிலும் அழிவை ஏற்படுத்தியுள்ளன.

இந்த இயற்கை அனர்த்தத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 62 வரை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து, தற்காலிக இருப்பிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.