செய்திகள்

மடிக்கணினியை இயக்கத் தெரியாத அமைச்சர்களை பதவி நீக்கப் போவதாக நேபாள பிரதமர் எச்சரிக்கை.

புதிய அமைச்சர்கள் ஆறு மாத காலத்திற்குள் மடிக்கணினிகளை இயக்கக் கற்றுக் கொள்ளாத பட்சத்தில், அவர்கள் பதவி நீக்கப்படுவார்கள் என நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி தெரிவித்துள்ளார். குறுகிய காலப்பகுதிக்குள் நேபாளத்தை தகவல் தொழில்நுட்ப ஸ்நேக தேசமாக மாற்றுவது அரசாங்கத்தின் நோக்கம் என பிரதமர் குறிப்பிட்டார். இந்தத் திட்டத்தின் கீழ் ஆறு மாத காலத்திற்குள் பிரதமரின் அலுவலகம் கடதாசிகள் இல்லாமல் செயற்படும் அமைப்பாக மாற்றப்படும் எனவும் அவர் கூறினார். நேற்று காத்மண்டுவில் இடம்பெற்ற தேசிய ஆசிரியர் கழகத்தின் 12ஆவது மாநாட்டில் அவர் உரையாற்;றினார்.