செய்திகள்

உச்சிமாநாட்டிற்கு முன்னதாக வடகொரியத் தலைவருடன் கூடுதல் பேச்சுவார்த்தை கோரும் தென்கொரிய ஜனாதிபதி

வடகொரியத் தலைவருடன் கூடுதல் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன், அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையிலான உச்சிமாநாட்டுக்கு முன்னதாக, பல விடயங்களைப் பேச வேண்டியுள்ளது என தென்கொரிய ஜனாதிபதி தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை வடகொரியத் தலைவருடன் நடத்திய சந்திப்பை அடுத்து அவர் நேற்று கருத்து வெளியிட்டார்.

ஜூன் 12ஆம் திகதி நடத்தத் திட்டமிட்டுள்ள உச்சிமாநாட்டில் இருந்து விலகுவதாக டொனல்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். அந்த மாநாட்டை எப்படியாவது சாத்தியமாக்குவது தென்கொரியத் தலைவரின் நோக்கம்