Sri Lanka Brodcasting Corporation

Sun04222018

Last updateFri, 20 Apr 2018 7pm

செய்திகள்

பேஸ்புக்கின் தவறுகள் குறித்து அமெரிக்க மக்களவையில் மன்னிப்புக் கோரிய மார்க் சக்கர்பர்க்.

தமது பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை தவறாக பயன்படுத்த இடமளித்த தவறுகள் குறித்து ஃபேஸ்புக்கின் ஸ்தாபகத் தலைவர் மார்க் சக்கர்பர்க் மன்னிப்பு கோரியுள்ளார். எட்டரை கோடிக்கு மேலான பயனர்களின் தகவல்களை பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் எனலிட்டிக்கா நிறுவனம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தேர்தல் பிரசாரக் குழுவிடம் வழங்கியிருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த விவகாரம் பற்றி அமெரிக்க மக்களவையின் வர்த்தக நீதிக்குழுக்கள் மார்க் சர்க்கர்பர்கை நேற்று விசாரித்தனர். இந்த விசாரணை ஒரு மணித்தியாலம் வரை நீடித்ததுடன், சக்கர்பர்க்கிடம் சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டதாக வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகை அறிவித்துள்ளது.

இடம்பெற்றது செய்தி

 

உள்ளூர் செய்திகள்