Sri Lanka Brodcasting Corporation

Mon02192018

Last updateMon, 19 Feb 2018 1pm

செய்திகள்

மாலைதீவில் அவசர கால நிலை – முன்னாள் ஜனாதிபதி அப்துல் கையூம் கைது

மாலைதீவில் நீடிக்கும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், எதிர்வரும் இரு வாரங்களுக்கு அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படைகள் உயர் நீதிமன்ற வளாகத்தை முற்றுகையிட்டுள்ளதுடன், முன்னாள் ஜனாதிபதி மைமூன் அப்துல் கையூம் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

அந்நாட்டு அரசாங்கம் பாராளுமன்றத்தை இடைநிறுத்தியுள்ளது. அத்துடன், ஜனாதிபதி அப்துல்லா யாமீனை அரசியல் குற்றப்பிரேரணை மூலம் அப்புறப்படுத்தும் முயற்சிகளை நிராகரித்துள்ளது. 2013ஆம் ஆண்டு தொடக்கம் பதவியில் இருக்கும் ஜனாதிபதி அப்துல்லா, எதிர்க்கட்சித் தலைவர்களை விடுதலை செய்யுமாறு கோரும் நீதிமன்ற உத்தரவை புறக்கணித்துள்ளார்.

இடம்பெற்றது செய்தி

 

உள்ளூர் செய்திகள்