Sri Lanka Brodcasting Corporation

Mon02192018

Last updateMon, 19 Feb 2018 1pm

செய்திகள்

இசைஞானி இளையராஜவுக்கு இந்தியாவின் அதியுயர் இரண்டாவது அரச விருதான பத்மவிபூஷன் விருது


இசைஞானி இளையராஜாவுக்கு இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் உள்ளிட்ட துறைகளில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, 'பத்ம' விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தினத்துக்கு முதல் நாள், பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம்.

இதன் பிரகாரம், இசையமைப்பாளர் இளையராஜா உட்பட மூன்று பேருக்கு, பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த, நாட்டுப்புற பாடகி, விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் பத்மஸ்ரீP விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விருது பெற்ற கருத்து வெளியிட்ட இசைஞானி இளையராஜா, இதன் மூலம் மத்திய அரசாங்கம் தமிழகத்தை கௌரவித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இவரை நடிகர்கள் கமலஹாசன், ரஜனிகாந்த் உள்ளிட்ட பலரும் பாராட்டியுள்ளார்கள்.

இடம்பெற்றது செய்தி

 

உள்ளூர் செய்திகள்