Sri Lanka Brodcasting Corporation

Wed11222017

Last updateWed, 22 Nov 2017 8pm

செய்திகள்

நியூயோர்க் தாக்குதலில் சம்பந்தப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள்.

நேற்று முன்தினம் நியூயோர்க் நகரில் ட்ரக் வண்டியின் மூலம் பலரை மோதிக் கொன்ற உஸ்பெகிஸ்தான் குடியேற்றவாசிக்கு எதிராக அமெரிக்காவில் பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. சைபுல்லா சைபோ என்ற 29 வயது மனிதர் ஐஎஸ் இயக்கத்திற்கும் உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதென பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மனிதர் சைக்கிள் தடத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது ட்ரக் வண்டியை மோதினார். இந்த சம்பவத்தில் எட்டு பேர் பலியானதுடன், பலர் காயமடைந்தார்கள். இஸ்லாமிய இராஜ்யம் இயக்கத்தினால் உந்தப்பட்டு, தாம் தாக்குதல் நடத்தியதாக சைபுல்லா கூறினார்.

இடம்பெற்றது செய்தி

 

உள்ளூர் செய்திகள்