Sri Lanka Brodcasting Corporation

Wed11222017

Last updateTue, 21 Nov 2017 8pm

செய்திகள்

ரொஹிஞ்ஜிய மக்கள் மனிதப் பேரவலத்தை எதிர்கொள்வதாக ஐநா செயலாளர் நாயகம் கூறுகிறார்.


மியன்மாரில் உள்ள ரொஹிஞ்ஜிய முஸ்லிம்கள் மிகவும் மோசமான மனித பேரவலத்தை எதிர்கொள்வதாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார். ரொஹிஞ்ஜிய கிராமவாசிகள் மீது மியன்மார் அரச படைகள் நடத்துவதாகக் கூறப்படும் தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாதென செயலாளர் நாயகம் அந்தோனியோ குத்தரெஸ் தெரிவித்துள்ளார். தாம் ரொஹிஞ்ஜிய கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகவே போரிடுவதாக மியன்மார் இராணுவம் கூறுகிறது. இந்த சமூகத்தினர் மீதான வன்முறைகளின் விளைவாக சுமார் மூன்று லட்சத்து 80 ஆயிரம் ரொஹிஞ்ஜிய முஸ்லிம்கள் பங்களாதேஷிற்கு தப்பிச் சென்றுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

இடம்பெற்றது செய்தி

 

உள்ளூர் செய்திகள்