Sri Lanka Brodcasting Corporation

Mon10232017

Last updateMon, 23 Oct 2017 8am

செய்திகள்

பேரழிவுக்கு அழைப்பு விடுக்க வேண்டாமென அமெரிக்கா வடகொரியாவை எச்சரித்துள்ளது.

வடகொரிய அரசாங்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து மக்களின் அழிவிற்கு வித்திடும் எந்தவொரு நடவடிக்கையையும் தவிர்த்துக் கொள்ளுமாறு அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவிற்கும், அதன் கூட்டாளி நாடுகளுக்கும் எதிரான யுத்தத்தில் வடகொரியா சமமாக மாட்டாதென அமைச்சர் ஜிம் மெட்டிஸ் கூறியுள்ளார். அமெரிக்காவிற்கு சொந்தமான குவாம் என்ற பிராந்தியத்தை தாக்குவது பற்றி ஆட்சியாளர்கள் சிந்தித்து வருவதாக  வடகொரியாவின் உத்தியோகபூர்வ செய்திஸ்தாபனம் அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சரின் எச்சரிக்கை வெளியாகிறது.

இடம்பெற்றது செய்தி

 

உள்ளூர் செய்திகள்