Sri Lanka Brodcasting Corporation

Tue10172017

Last updateTue, 17 Oct 2017 6pm

செய்திகள்

லண்டன் குடியிருப்பு மனைத் தொகுதி தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கையின் அனுதாபம்.

லண்டன் அடுக்குமாடி குடியிருப்பு மனை தீ விபத்தால் விளைந்த பேரழிவுகளால் இலங்கை ஆழ்ந்த கவலை அடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் தமது உற்றார் உறவினர்களை இழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் இலங்கை மக்கள் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கென்ஸின்டன் வடக்கில் உள்ள கிரென்ஃபெல் டவரில் நேற்று அதிகாலை தீ ஏற்பட்டது. இதில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்பட்டதாக இதுவரை உறுதியாக தெரியவில்லை. இதுபற்றி உஷாராக இருந்து தேவையான சந்தர்ப்பத்தில் உதவிகளை வழங்குவதாக லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இடம்பெற்றது செய்தி

 

உள்ளூர் செய்திகள்