Sri Lanka Brodcasting Corporation

Fri08182017

Last updateFri, 18 Aug 2017 7pm

செய்திகள்

இங்கிலாந்தின் உயர் மாடிக் கட்டடத்தில் தீ. - பங்களாதேஷில் மண்சரிவால் 137 பேர் வரை மரணம்.

மேற்கு லண்டனில் அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியொன்றில் ஏற்பட்ட பெருந்தீ காரணமாக 30 பேர் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

Lancaster West Estate என்ற பிரதேசத்தைச் சேர்ந்த Grenfell Tower இல் இங்கிலாந்து நேரப்படி இன்று அதிகாலை ஒரு மணியளவில் தீ ஏற்பட்டது. இந்தத் தொடரில் 24 மாடிகள் உள்ளன. இவற்றில் 120 குடியிருப்புகள் உள்ளதாகத் தெரிகிறது.

கட்டடத்தில் தீ பற்றிக் கொண்டு ஐந்து மணித்தியாலம் கடந்த பின்னரும் இன்னமும் அம்ப்யூலன்ஸ் வண்டிகள் தீயை அணைக்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்டடத்திற்குள் பொதுமக்கள் சிக்கியிருக்கிறார்களா என்பது தெளிவாக தெரியவில்லை. எனினும், உள்ளே இருக்கின்ற குடும்பத்தவர்கள் மற்றும் உறவினர்களுடன் பேச முடியவில்லை என ஸ்தலத்தில் இருந்த பலர் கூறியதாக லண்டன் ஊடகங்கள் அறிவித்துள்ளன.

ஸ்தலத்திற்கு 45 தீ அணைப்பு கருவிகளும், 200 தீ அணைப்புப் படைவீரர்களும் அனுப்பப்பட்டதாக லண்டன் தீ அணைப்புப் படைப்பிரிவு அறிவித்துள்ளது. இது மிகவும் பாரதூரமான சம்பவம் என மேலதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கட்டடத்தில் இருந்து எழும் புகையை பல கிலோமீற்றர் தொலைவிலிருந்து அவதானிக்கக்கூடியதாக இருக்கிறதென ஊடகங்கள் அறிவித்துள்ளன.
============
பங்களாதேஷில் அடைமழையால் விளைந்த மண்சரிவுகளில் பலியானவர்களின் எண்ணிக்கை 137 வரை அதிகரித்துள்ளது. இந்திய எல்லைக்கு அருகில் அமைந்துள்ள பின்தங்கிய மலைப்பாங்கான பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக சிட்டகொங், ரங்கமத்தி, பண்டாபான் முதலான மாவட்டங்கள் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மலைப் பிரதேசங்களில் பெருமளவு சிதைவுகள் திரண்டிருப்பதால், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடுமென இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இடம்பெற்றது செய்தி

 

உள்ளூர் செய்திகள்