Sri Lanka Brodcasting Corporation

Fri10202017

Last updateThu, 19 Oct 2017 1pm

செய்திகள்

பாகிஸ்தானில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இந்தியரை விடுவிப்பதற்கு இந்திய அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது.

பாகிஸ்தானில் மரணதண்டனை பெற்றுள்ள குல்புஷன் யாதவ்வை விடுதலை செய்ய சகல நடவடிக்கைகளையும் எடுக்கப் போவதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இவருக்காக தலைசிறந்த சட்டத்தரணிகளை வழங்குவதுடன் நில்லாமல், இவரது விடுதலை குறித்து அந்நாட்டு ஜனாதிபதியுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பாராளுமன்றத்தில் உறுதியளித்தார். பாகிஸ்தானிய இராணுவ நீதிமன்றம் யாதவ்விற்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. உளவுபார்த்த குற்றச்சாட்டிற்காக அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது இந்திய - பாகிஸ்தான் உறவுகளில் பதற்ற நிலையை தீவிரப்படுத்தியுள்ளது.

இடம்பெற்றது செய்தி

 

உள்ளூர் செய்திகள்