Sri Lanka Brodcasting Corporation

Sun05282017

Last updateFri, 26 May 2017 8pm

செய்திகள்

தாம் ரஷ்ய விபச்சாரிகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை டொனால்ட் ட்ரம்ப் நிராகரிப்பு.

தாம் ரஷ்ய விபச்சாரிகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தாம் கிருமிகள் தொடர்பில் தீவிர அச்சம் கொண்டிருப்பதாக ட்ரம்ப் குறிப்பிட்டார். அவர் நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் காரசாரமாகப் பேசினார். டொனால்ட் ட்ரம்ப் சம்பந்தப்பட்ட ஒன்றுக்கு மேலான வீடியோ ஒளிநாடாக்கள் ரஷ்யாவிடம் உள்ளதாக கூறப்பட்டது. இது குறித்து அமெரிக்கப் புலனாய்வு நிறுவனங்கள் விசாரிப்பதாக பிபிசியின் செய்தியாளர் ஒருவர் குறிப்பிட்டார். இந்த வீடியோ பாலியல் காட்சிகளை உள்ளடக்கியது என்பதை சீஐஏ வட்டாரங்கள் அறிவித்ததாக அவர் கூறினார்.

இடம்பெற்றது செய்தி

 

உள்ளூர் செய்திகள்