Sri Lanka Brodcasting Corporation

Tue02212017

Last updateTue, 21 Feb 2017 8am

செய்திகள்

அமெரிக்க புலனாய்வு நிறுவனங்களை சாடும் டொனல்ட் ட்ரம்ப்.

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனல்ட் ட்ரம்ப் புலனாய்வு நிறுவனங்களை சாடியுள்ளார். தமது தனிப்பட்ட வாழ்க்கைக்கு அவதூறு ஏற்படுத்தக்கூடிய விடயங்களை ரஷ்யா வைத்திருக்கிறது என்ற தகவலை புலனாய்வு நிறுவனங்கள் கசியச் செய்ததாக ட்ரம்ப் சாட்டியிருக்கிறார். அவர் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றினார். ட்ரம்ப்பின் வர்த்தக அலுவல்கள் பற்றிய தகவல்களை வெளியிடும் நோக்கில் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அந்த மாநாட்டில் ரஷ்யாவின் வசமுள்ளதாகக் கூறப்படும் ட்ரம்ப்பின் அந்தரங்க வாழ்க்கை பற்றிய வீடியோ தொடர்பான கேள்விகள் முக்கியத்துவம் பெற்றிருந்தன.

இடம்பெற்றது செய்தி

 

உள்ளூர் செய்திகள்