Sri Lanka Brodcasting Corporation

Wed03292017

Last updateTue, 28 Mar 2017 1pm

செய்திகள்

இந்த வருடத்தில் உலக பொருளாதார வளர்ச்சி வேகம் குறைவடையலாம் என உலக வங்கி எச்சரிக்கை.

இந்த வருடத்திலும் அடுத்த வருடத்திலும் உலகின் பொருளாதார வளர்ச்சி வேகம் ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டபடி வீழ்ச்சியடையும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

வங்கியின் புதிய எதிர்வுகூறலுக்கு அமைய 2017ம் ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி வேகம் 2.7 சதவீதமாகும். 2018ம் ஆண்டில் இது 2.9 சதவீதமாக அமைந்திருக்கும். இந்தப் பெறுமானங்கள் இதற்கு முன்னர் வங்கியினால் அறிவிக்கப்பட்ட அளவையும் விட தசம் சதவீதத்தால் குறைந்துள்ளது. அமெரிக்கா ஐரோப்பாஜப்பான் போன்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வேகம் இந்த இரண்டு வருடங்களில் 1.8 சதவீதமாகவும் 1.7 சதவீதமாகவும் அமைந்திருக்கும். எனினும் வளர்முக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வேகம் இந்த வருடங்களில் 4.2 சதவீதமாகவும் 4.6 சதவீதமாகவும் அமைந்திருக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

இடம்பெற்றது செய்தி

 

உள்ளூர் செய்திகள்