Sri Lanka Brodcasting Corporation

Fri10202017

Last updateThu, 19 Oct 2017 1pm

செய்திகள்

மஞ்சள் காமாலை யினால் உயிரிழந்த கலிபோர்னியா மாநில மக்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு.

கலிபோர்னியாவில் பரவியுள்ள மஞ்சள் காமாலை உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. மஞ்சள் காமாலை பரவி ஒரு வாரத்திற்குப் பின்னர் இந்த மாநிலத்தின் ஆளுநர் சுகாதார அவசர நிலைமையை பிரகடனப்படுத்தியுள்ளார். கடந்த நவம்பர் மாதம் முதல் கலிபோர்னியாவில் உள்ள 500ற்கு மேற்பட்ட மக்கள் வைரஸ் நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் பலர் வீடுகளை இழந்துள்ளனர். ஈரலை தாக்கும் இந்த வைரஸ் நோய் பாலியல் ஊடாக அல்லது மாசடைந்த உணவு மற்றும் பொருட்களை தொடுவதன் மூலம் தொற்றுகின்றது. கடந்த இரண்டு வருடங்களில் அமெரிக்காவில் பரவியுள்ள இரண்டாவது மிகப்பெரிய மஞ்சள் காமாலை வகையாக இந்த நோய் விளங்குகின்றது.

சுதந்திரக் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புக்களை அடுத்து கற்றலானிலும், குர்திஷ் பிராந்தியத்திலும் நெருக்கடிகள் தீவிரம்.

குர்திஷ் போராளிகளின் வசமிருந்து கிர்குக் நகரின் முக்கியமான கட்டிடங்களைக் கைப்பற்றிய ஈராக்கிய அரச படைகள், அந்நகரின் மத்திய பகுதிக்குள் பிரவேசித்துள்ளன. படைகளின் முன்னேற்றத்தை அறிந்து ஆயிரக்கணக்கான மக்கள் நகரை விட்டு வெளியேறியிருப்பதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. குர்திஷ்தான் பிராந்தியத்திற்கு சுதந்திரம் கோரும் சர்ச்சைக்குரிய கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பைத் தொடர்ந்து ஈராக்கிய இராணுவம் முன்னேறுகிறது. கிர்குக் அடங்கலாக குர்திஷ் கட்டுப்பாட்டு பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் ஈராக்கிலிருந்து சுதந்திரம் பெறுவதற்கு ஆதரவாக வாக்களித்தார்கள்.

ஐரோப்பிய நாடுகளில் ஹெப்பரைட்டிஸ்-ஏ நோய் பரவும் ஆபத்து.

ஐரோப்பிய நாடுகளில் ஹெப்பரைட்டிஸ்-ஏ நோய் பரவும் ஆபத்துத் தோன்றியுள்ளது. கடந்த 16 மாதங்களுக்குள் ஐரோப்பாவில் 20 நாடுகளில் இந்த நோய் பரவியுள்ளமை குறித்து, தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நோய் மேலும் பரவும் ஆபத்து இருப்பதோடு, எதிர்காலத்தில் மிக வேகமாகப் பரவக்கூடிய வாய்ப்பு இருப்பதாக ஐரோப்பிய நிர்வாக மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

24 நாடுகளைக் கொண்ட ஜி-24 குழுமத்தின் தலைமைப் பதவியை இலங்கை ஏற்றுள்ளது.

.

24 நாடுகளின் சர்வதேச நாணய நிதி விவகாரங்கள் மற்றும் அபிவிருத்தி  தொடர்பான வேலைத்திட்டங்கள்குறித்து உத்தியோகபூர்வமாக அறிவித்தல்களை விடுக்கும் நோக்கில் இது அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுமம் சர்வதேச நாணய நிதியத்தின் ஒரு அங்கம் அல்ல என்றும் அறிவிக்கப்படுகிறது

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த அமர்வுகளில் கலந்து கொள்வதற்காகதற்சமயம் அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள நிதி மற்றும்ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இலங்கை சார்பில் இந்த குழுமத்தின் தலைமைப் பதவியைஏற்றுக்கொண்டார்.

ஜி-24 குழுமத்தின் அடுத்த வருடத்திற்கான தொனிப்பொருள் 'வளர்ச்சிசெயற்பாடுகள் மற்றும் மீள்கட்டுமாணம்என்பதாகும்.

தமிழகத்தில் டெங்கு நோய் தீவிரம்.

தமிழகத்தில்  டெங்கு நோய் வேகமாக அதிகரித்து வருவதால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. போர் கால நிலையைப் போன்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது. பாடசாலை மாணவர்கள் மத்தியில் இந்நோயின் தாக்கம் கடந்த சில நாட்களில் தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால் 10ற்கு மேற்பட்ட பாடசாலைகள் உயிரிழந்திருப்பதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் உள்ள வைத்தியசாலைகளில் நாளாந்தம் நூற்றுக்கு மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் சிகிச்சை பெற வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சையளிப்பதற்கு போதியளவு மருத்துவர்கள் இல்லாதிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. டெங்கு நோயை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆய்வுகளும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக தமிழக மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் மிலேனியம் செலெஞ்ஜர் கோப்பரேஷன் நிறுவனம் இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்கிறது.

 

அமெரிக்காவின் மிலேனியம் செலெஞ்ஜர் கோப்பரேஷன் நிறுவனம் இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்கிறது. அமைச்சர் மங்கள சமரவீரவின் வேண்டுகோளின் பேரில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் ஆசிய பிராந்திய தலைவர் பெட்டேமா சுமாரி அம்மையாருடன் இடம்பெற்ற

Read more...

கற்றலோனிய பிராந்தியத்திற்கு காலக்கெடு விதிக்கும் ஸ்பெயின் அரசு.

கற்றலோனியா சுதந்திரப் பிரகடனம் செய்துள்ளதா என்பதை ஐந்து நாட்களுக்குள் அறிவிக்க வேண்டுமென ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் பிராந்தியத் தலைவரை கேட்டுள்ளார். சுதந்திர பிரகடனத்தை பிராந்தியத் தலைவர் கார்லெஸ் புயிக்டெமோன்ட் ஊர்ஜிதம் செய்தால், அவருக்கு பிரகடனத்தை வாபஸ் பெற மூன்று நாள் கால அவகாசம் வழங்கப்படும். ஊர்ஜிதம் செய்யத் தவறும் பட்சத்தில் கற்றலோனியாவின் சுயாட்சியை இடைநிறுத்தி, நேரடி ஆட்சியை பிரயோகிக்க வழிவகுக்கும் உத்தரவை ஸ்பெயின் அரசு அமுலாக்கும்.

கட்டலோனியா சுதந்திர பிரகடனம் இன்னும் இழுபறி நிலையில் உள்ளது.

கற்றலோனிய சுதந்திர மாநில பிரகடனம் இன்னும் இழுபறியில் இருப்பதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்த போதிலும் கற்றலோனிய ஜனாதிபதி கார்ள்ஸ் பூஜ்டெமொன்ட் மற்றும் ஏனைய பிராந்திய தலைவர்கள் சுதந்திர பிரகடனத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். சர்ச்சைக்குரிய சர்வஜன வாக்கெடுப்பின் பின்னர் இந்த நிலைமை தோன்றியுள்ளது. எவவாறாயினும், கற்றலோனிய பிராந்தியத்தை சுயாதீன மற்றும் ஆட்புற இறைமை கொண்ட ஒரு மாநிலமாக உலக நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று திரு.பூஜ்டெமொன்ட் வலியுறுத்தியுள்ளார்.

பங்களாதேஷூக்கு அருகில் ரோஹிங்ய அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

பங்களாதேஷூக்கு அருகில் ரோஹிங்ய அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை நாஃப் ஆற்றில் இடம்பெற்ற இந்த விபத்தில் 100 பேர் வரை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காணாமல் போனவர்களை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மியன்மாரின் ரக்கேன் மாநிலத்தில் இடம்பெற்றுவரும் இராணுவ நெருக்குவாரங்களை அடுத்து அயல்நாடான பங்களாதேஷிற்கு செல்ல முயன்ற வேளை இதற்கு முன்னர் பலர் உயிரிழந்துள்ளனர். நேற்று இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்த 10 குழந்தைகள் உட்பட 12 பேரின் சடலங்களை மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மாத பிற்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 60 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. மியன்மாரின் எல்லையை தரைவழியாக கடந்து  செல்லவும், கடல் வழியாக செல்லவும் ரோஹிங்ய மக்கள் முயற்சித்து வந்தனர்.

மத்திய அமெரிக்காவில் நேட் சூறாவளி தாக்கத்தினால் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய அமெரிக்காவில் நேட் சூறாவளி தாக்கத்தினால் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளனர். ஹொஸ்ட்டாரிக்கா, நிக்கரகுவா மற்றும் ஹொண்டுரஸ் ஆகிய பிரதேசங்களை இந்த சூறாவளி பெரிதும் தாக்கியுள்ளது. இதனால் மத்திய அமெரிக்கா நாடுகளில் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஹொஸ்ட்டாரிக்கா நாட்டில் சுமார் நான்கு லட்சம் பேர் நீர் மற்றும் மின்சார வசதிகள் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். நிக்கரகுவா நாட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஹோண்டுரஸ் நாட்டில் இரண்டு இளைஞர்கள் ஆற்று நீரில் மூழ்கியுள்ளனர்.

இடம்பெற்றது செய்தி

 

உள்ளூர் செய்திகள்