Sri Lanka Brodcasting Corporation

Fri04272018

Last updateThu, 26 Apr 2018 9am

செய்திகள்

அமெரிக்க மக்களவை உரையில் தேசியவாதத்தை தாக்கிப் பேசிய பிரான்ஸ் பிரதமர்.

அமெரிக்க மக்களவையில் உரையாற்றிய பிரான்ஸ் ஜனாதிபதி இமேனுவல் மெக்ரன், தேசியவாதத்தை கண்டித்து பேசியுள்ளார். நேற்று செனட் சபை, பிரதிநிதிகள் சபை ஆகியவற்றின் கூட்டு அமர்வில் ஜனாதிபதி மெக்ரன் உரையாற்றினார். தேசியவாத, தனிமைத்துவவாத கொள்கைகள் உலக சுபீட்சத்திற்கு அச்சுறுத்தலாக திகழ்கின்றன என்று அவர் சாடினார். இந்த உரையானது, அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் அனுசரிக்கும் அமெரிக்கா ஃபெஸ்ட் என்ற நிகழ்ச்சி நிரலுக்கு மறைமுகமாக தெரிவிக்கப்பட்ட கண்டனமாக புரவலாக நோக்கப்படுகிறது.

பிரிட்டன் அரச குடும்பத்திற்கு மற்றுமொரு வாரிசு கிடைத்துள்ளதை அடுத்து, பல்வேறு நாடுகளின் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த வில்லியம் - கேட் மிடில்டன் தம்பதிக்கு நேற்று பிறந்த ஆண் குழந்தைக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் வில்லியம் - கேத் மிடில்டன் தம்பதிக்கு ஏற்னவே ஜார்ஜ் என்ற மகனும், சார்லட் என்ற மகளும் உள்ளனர். மூன்றாவது முறையாக கர்பமாக இருந்த கேத் மிடில்டன் பிரசவத்திற்காக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், உள்ளுர் நேரப்படி சுமார் 11 மணியளவில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், குட்டி இளவரசர் வருகைக்கு பிரிட்டன் பிரதமர் தெரேசா மே, கனடா பிரதமர் ஜஸ்டின், மிட்சேல் ஒபாமா, பிரிட்டன் எதிர்க்கட்சி தலைவர் ஜேரேமி, லண்டன் மேயர் சாதிக்கான் உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது திரைத்துறை பிரபலங்களும் குட்டி இளவரசரை வரவேற்றுள்ளனர்.

டொரன்டோவில் பாதசாரிகள் மீது பாய்ந்த வான் - ஒன்பது கனேடியர்கள் பலி

கனடாவின் டொரன்டோ நகரில் ஒரு மனிதன் வானை பாதசாரிகள் மீது செலுத்தியதில் ஒன்பது பேர் பலியானதுடன் 16 பேர் காயமடைந்துள்ளனர்.

Read more...

கியூபாவிற்கு புதிய தலைவர்.

கியூபாவின் தேசிய மக்களவை நாட்டை வழிநடத்தக்கூடிய அடுத்தத் தலைவரை பிரேரித்துள்ளது. இதன் பிரகாரம் ராவுல் கெஸ்ட்ரோவுக்குப் பின்னர் மிகெல் டயஸ் கெனல் என்பவர் கியூபாவின் தலைவராக தெரிவு செய்யப்படவுள்ளார். இவர் சமகால துணை ஜனாதிபதியாவார். ராவுல் கெஸ்ட்ரோவின் வலது கரமாகவும் வர்ணிக்கப்படுகிறார். கியூபாவின் அடுத்தத் தலைவரை பிரேரிப்பதற்கான வாக்கெடுப்பில் நேற்று மிகெல் டயஸ் தெரிவு செய்யப்பட்டார். இன்று பாராளுமன்ற அமர்வுகள் முடிவடைந்ததும், ஜனாதிபதி பதவியை ராவுல் கெஸ்ட்ரோ, மிகெல் டயஸிடம் முறையாக ஒப்படைப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

35 வருடங்களின் பின்னர் சவூதி அரேபிய மக்களுக்கு திரைப்படம் பார்க்க சந்தர்ப்பம்.

சவூதி அரேபிய மக்களுக்கு மீண்டும் திரைப்படம் பார்க்க சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. 35 வருடங்களின் பின்னர் நாளை ரியாத் நகரில் சினிமா மண்டபம் ஒன்று திறக்கப்படவுள்ளது. எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் 15 நகரங்களில் 40 சினிமா திரையரங்குகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. மதத் தலைவர்களின் ஆலோசனைபடி சவூதி அரேபியாவில் 1980ஆம் ஆண்டு திரைப்படம் தடை செய்யப்பட்டது. சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் மேற்கொண்டுவரும் திருத்தங்களின் ஒரு நடவடிக்கையாக மீண்டும் அந்நாட்டில் சினிமா திரையரங்குகள் திறக்கப்படவுள்ளன.

இந்தியப் பிரதமர் சுவீடன் மற்றும் பிரித்தானியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று சுவீடன், பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கு ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்கிறார். நாளை இவர் சுவீடனில் ஸ்டொக்ஹோமில் சுவீடன், பின்லாந்து, நோர்வே, டென்மார்க், ஐஸ்லாந்து ஆகிய நாடுகளின் பிரதமர்கள் கலந்து கொள்ளும் மாநாட்டில் உரையாற்றவுள்ளார். எதிர்வரும் புதன்கிழமை இந்தியப் பிரதமர் பிரித்தானியாவுக்கு செல்லவுள்ளார்.

அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப் போவதில்லை என சிரியாவின் அரசாங்கம் அறிவித்துள்ளது.

தமது நாட்டை தாக்குவதாகக் கூறும் அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப் போவதில்லை என சிரியாவின் அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த அச்சுறுத்தல் கூடுதல் அழுத்தம் தொடுத்து அனுகூலங்களை பெரும் நோக்கம் கொண்டதாகும் என ஜனாதிபதி பஸார் அல் அசாத்தின் ஆலோசகர் பூத்தயினா ஷபான் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அச்சுறுத்தல் பற்றி நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றன. அந்நாடுகள் அமெரிக்கா நினைத்தபடி செயற்பட இடமளிக்க மாட்டா என ஆலோசகர் கூறினார். சிரியாவின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி நேற்று எச்சரித்திருந்தார்.

பேஸ்புக்கின் தவறுகள் குறித்து அமெரிக்க மக்களவையில் மன்னிப்புக் கோரிய மார்க் சக்கர்பர்க்.

தமது பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை தவறாக பயன்படுத்த இடமளித்த தவறுகள் குறித்து ஃபேஸ்புக்கின் ஸ்தாபகத் தலைவர் மார்க் சக்கர்பர்க் மன்னிப்பு கோரியுள்ளார். எட்டரை கோடிக்கு மேலான பயனர்களின் தகவல்களை பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் எனலிட்டிக்கா நிறுவனம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தேர்தல் பிரசாரக் குழுவிடம் வழங்கியிருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த

Read more...

இசை, நாட்டிய நாடகம், சினிமா துறைகளின் மேம்பாட்டுக்காக பிரான்ஸின் உதவியை நாடும் சவூதி

சவூதி அரேபியாவில் தேசிய ஒப்பெராவையும், இசைக்குழுவையும் ஸ்தாபிக்க பிரான்ஸின் நிபுணத்துவ உதவி நாடப்படவுள்ளது.

பிரான்ஸிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கும் சவூதி இளவரசர் மொஹம்மது பின் சல்மான், இதற்குரிய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளார்.

Read more...

ஹிந்தி நடிகர் சல்மான் கானுக்கு ஐந்து வருட சிறைத்தண்டனை

புகழ்பெற்ற ஹிந்தித் திரைப்பட நடிகர் சல்மான் கானுக்கு ஐந்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அரிய வகை மானை வேட்டையாடியமைக்காக அவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக அவர் பத்தாயிரம் இந்திய ரூபாவை அபராதமாக செலுத்த வேண்டும் என்று ஜோத்பூர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Read more...

இடம்பெற்றது செய்தி

 

உள்ளூர் செய்திகள்