விளையாட்டு

உலகக் கிண்ணக் கிரிக்கட் தொடரில் ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.

உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டித் தொடரின் 24ஆவது போட்டி இன்று ஆப்கானிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்;பெறவுள்ளது. இந்தப் போட்டி மாலை 3 மணிக்கு மேன்சஸ்டர் நகரில் இடம்பெறவுள்ளது. காயம் காரணமாக இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜேஸன் ரோய் பங்கேற்க மாட்டாரென தெரிவிக்கப்படுகின்றது. 
 
இதனிடையே, உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டித் தொடரின் புள்ளிப் பட்டியலின் அடிப்படையில் அவுஸ்திரேலிய அணி 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் காணப்படுகிறது. நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் 7 புள்ளிகளுடன் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களில் காணப்படுகின்றன. 6 புள்ளிகளை பெற்றுள்ள இங்கிலாந்து அணி நான்காவது இடத்தில் காணப்படுகிறது. மேற்கிந்திய தீவுகள் அணியுடனான நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆறாம் இடத்தில் இலங்கை அணியும், ஏழாமிடத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியும் காணப்படுகின்றன. எட்டாமிடத்தில் தென்னாபிரிக்க அணியும், ஒன்பதாவது இடத்தில் பாகிஸ்தான் அணியும், பத்தாவது இடத்தில் ஆப்கானிஸ்தான் அணியும் காணப்படுகின்றன.