விளையாட்டு

ஆசிய வெற்றிக் கிண்ண மகளிர் ரி-20 சுற்றுத்தொடருக்காக இலங்கை மகளிர் அணி மலேசியா பயணம்.


ஆசிய வெற்றிக் கிண்ண மகளிர் கிரிக்கட் சுற்றுத்தொடரில் இலங்கை மகளிர் அணி சவாலாக திகழும் என அதன் பயிற்றுவிப்பாளர் ஹேமந்த தேவப்பிரிய தெரிவித்துள்ளார். இலங்கை வீராங்கனைகள் திறமையானவர்கள் என திரு தேவப்பிரிய குறிப்பிட்டார். அவர் நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்டார். ஆசிய வெற்றிக் கிண்ண மகளிர் ரி-ருவன்ரி சுற்றுத்தொடரில் கலந்து கொள்வதற்காக இலங்கை மகளிர் அணி இன்று மலேசியா செல்கிறது. இந்தச் சுற்றுத்தொடர் நாளை மறுதினம் ஆரம்பமாகிறது. இதில் இலங்கை, பங்களாதேஷ், மலேசியா, தாய்லாந்து, இந்தியா ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன.