விளையாட்டு

ஆடுகள நிர்ணய சூதாட்டம்: மூவர் இடைநிறுத்தம்

ஆடுகள நிர்ணய சூதாட்டத்தில் சம்பந்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று பணியாளர்களை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

அல் ஜசீரா தொலைக்காட்சி அம்பலப்படுத்திய விவகாரத்தின் அடிப்படையில் மாவட்ட பயிற்றுவிப்பாளர் தரிந்து மென்டிஸ், துணை முகாமையாளர் தரங்க இந்திக்க, முன்னாள் ஆட்டக்காரர் ஜீவன் குலத்துங்க ஆகியோரை இடைநிறுத்தியதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் துணைத் தலைவர் மொஹான் டீ சில்வா தெரிவித்தார். அவர் நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் தகவல் அறிவித்தார்.

2016ஆம் ஆண்டு இடம்பெற்ற இலங்கை - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரெஸ்ட் போட்டியின் போது காலி சர்வதேச மைதானத்தின் ஆடுகளத்தை பந்துவீச்சாளர்களுக்குச் சார்பான விதத்தில் மூவரும் மாற்றியமை பற்றி அல் ஜசீரா செய்தி வெளியிட்டிருந்தது.