Sri Lanka Brodcasting Corporation

Sun04222018

Last updateFri, 20 Apr 2018 7pm

விளையாட்டு

பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு மற்றொரு பதக்கம்.

21ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் அனுஷா கொடிதுவக்கு என்ற வீராங்கனை இலங்கைக்காக முதல் தடவையாக குத்துச்சண்டை போட்டிகளில் பதக்கம் ஒன்றை வென்றுள்ளார். இவர் 45-48 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். 1950ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை குத்துச்சண்டை வீராங்கனை ஒருவர் பதக்கம் ஒன்றை வென்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும். பொதுநலவாய விளையாட்டு விழாவின் வரலாற்றில் மகளிர் குத்துச்சண்டைப் பிரிவில் முதல் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை என்ற பெருமையும் இவரை சாரும். 21ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் இதுவரை இலங்கை நான்கு பதக்கங்களை வென்றுள்ளது. இவற்றில் ஒரு வெள்ளிப் பதக்கமும், மூன்று வெண்கலப் பதக்கங்களும் உள்ளடங்கும்.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி