Sri Lanka Brodcasting Corporation

Sun04222018

Last updateFri, 20 Apr 2018 7pm

விளையாட்டு

பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை வீரர் தேசிய சாதனை

அவுஸ்திரேலியாவின் கோல்ட்-கோஸ்டில் நடைபெறும் பொதுநலவாய விளையாட்டு விழாவின் நேற்றைய தினத்தில் இலங்கை வீரர் மஞ்சுள குமார உயரம் பாய்தலில் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார். அவர் இரண்டு தசம் இரண்டு-ஒரு மீற்றர் உயரத்;தைப் பாய்ந்தார். இறுதிப் போட்டி நாளை நடைபெறும்.

நீச்சல் வீரர் மத்திவ் அபயசிங்க ஃப்ரீ-ஸ்ரைல் பிரிவில் இலங்கைக்கான சாதனையை நிலைநாட்டினார். இவர் குறித்த தூரத்தை 26 தசம் 6 செக்கன்களில் கடந்த அரையிறுதிச் சுற்றுக்குத் தெரிவானார்.

இன்று தினிந்து சப்ரமாது, திவங்க ரணசிங்க, கேஷானி ஹன்ஸிகா ஆகியோர் குத்துச் சண்டை கால்-இறுதிப் போட்டிகளில் விளையாடவுள்ளனர்.

இலங்கை அணி பீச் வொலிபோல் விளையாட்டில் சியராலியோன் அணியிடம் இரண்டுக்கு பூச்சியம் என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி