Sri Lanka Brodcasting Corporation

Mon02192018

Last updateMon, 19 Feb 2018 1pm

விளையாட்டு

ஆசிய உள்ளக மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கைக்கு பதக்கங்கள்

ஈரானில் இடம்பெற்ற எட்டாவது ஆசிய உள்ளக மெய்வாண்மை சமபியன் ஷிப் சுற்றுத்தொடரில் இலங்கை ஒரு தங்கம் அடங்கலாக நான்கு பதக்கங்களை வென்றுள்ளது.

இந்தச் சுற்றுத்தொடர் கடந்த முதலாம் திகதி தொடக்கம் மூன்றாம் திகதி வரை அப்தாவ் மெய்வாண்மைக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது. இதில் இலங்கையின் சார்பில் நான்கு பெண்கள் அடங்கலாக ஐந்து போட்டியாளர்கள் பங்கேற்றார்கள்.

பெண்களுக்கான ஆயிரத்து 500 மீற்றர் ஓட்டப் போட்டியில் கஜந்திகா அபயரத்ன தங்கம் வென்றார். 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் நிமாலி லியனாராச்சியும் 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் உபமாலிகா ரத்னகுமாரியும், தூரம் பாய்தலில் ஜனக்க பிரசாத்தும் வெண்கலம் வென்றார்கள்.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி