Sri Lanka Brodcasting Corporation

Tue10242017

Last updateTue, 24 Oct 2017 9am

விளையாட்டு

டெஸ்ட் தரப்படுத்தல் வரிசையில் ஆறாவது இடத்திற்கு முன்னேறிய இலங்கை அணி.

எமிரேட்ஸில் இடம்பெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் சுற்றுத்தொடரில் வெற்றி பெற்றதை அடுத்து, தரவரிசைப் பட்டியலில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது. இலங்கை 94 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தை நோக்கி முன்னேறியபோது, பாகிஸ்தான் 88 புள்ளிகளுடன் ஏழாம் இடத்தை நோக்கி பின்தள்ளப்பட்டது. இலங்கை அணி அடுத்ததாக மூன்று போட்டிகள் அடங்கிய சுற்றுத்தொடரில் முதலிடத்தில் உள்ள இந்தியாவை சந்திக்கிறது. முதல் போட்டி நவம்பர் 16ஆம் திகதி ஆரம்பமாகும். பாகிஸ்தான் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் அயர்லாந்தை எதிர்கொள்கிறது.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி