Sri Lanka Brodcasting Corporation

Sun09242017

Last updateFri, 22 Sep 2017 8pm

விளையாட்டு

சுதந்திரக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி.

சுதந்திரக் கிண்ணத்திற்கான ருவன்ரி ருவன்ரி கிரிக்கெட் போட்டித் தொடரில் பாகிஸ்தான் அணி உலக கிரிக்கெட் அணியை 20 ஓட்டங்களால் வெற்றி கொண்டுள்ளது. இந்தப் போட்டி நேற்றிரவு லாகூரில் இடம்பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 197 ஓட்டங்களைப் பெற்றது. பாபர் அசாம் 86 ஓட்டங்களைப் பெற்றார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய உலக அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 177 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. திசர பெரேரா 17 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி நாளை இரவு லாகூரின் கடாபி மைதானத்தில் நடைபெறும்.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி