Sri Lanka Brodcasting Corporation

Thu02222018

Last updateWed, 21 Feb 2018 8pm

விளையாட்டு

உலக பதினொருவர் அணிக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான முதல் ரி-ருவென்ரி இன்று லாகூரில் இடம்பெறவுள்ளது.

பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் விளையாடப்டுவதையிட்டு தாம் மகிழ்ச்சியடைவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் ஷசாங் மனோகர் தெரிவித்துள்ளார். உலக பதினொருவர் அணி பங்கேற்கும் சுற்றுத்தொடர் பாகிஸ்தானில் ஏனைய நாடுகளைச் சேர்ந்த அணிகள் விளையாடும் போட்டிகளுக்கு வழிவகுக்கக்கூடும் என திரு.மனோகர் நம்பிக்கை வெளியிட்டார். 2009ஆம் ஆண்டு லாகூர் நகரில் இலங்கை அணி பயணித்த பஸ் வண்டி மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானிய மண்ணில் உயர்மட்ட கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. இந்த நிலமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் சர்வதேச கிரிக்கெட் பேரவை உலக பதினொருவர் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளது. இந்த அணிக்கும் பாகிஸ்தானும் இடையில் 3 போட்டிகள் அடங்கிய ரி-ருவென்ரி சுற்றுத்தொடர் இடம்பெறவுள்ளது. முதற்போட்டி இன்றிரவு 7.30ற்கு லாகூரில் ஆரம்பமாகும். உலக பதினொருவர் அணியில் இலங்கையின் சார்பாக திசர பெரேரா விளையாடுகிறார்.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி