Sri Lanka Brodcasting Corporation

Wed11222017

Last updateTue, 21 Nov 2017 8pm

விளையாட்டு

இலங்கை அணிக்கு எதிரான ரி-20 போட்டியிலும் இந்தியா அமோக வெற்றியீட்டியுள்ளது

கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஒரேயொரு ரீ-ட்வென்ரி போட்டியில் இந்தியா ஏழு விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை வீரர்கள் ஏழு விக்கட் இழப்பிற்கு 170 ஓட்டங்களை எடுத்தார்கள். டில்ஷான் முனவீர 53 ஓட்டங்கள். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நான்கு பந்துவீச்சுக்கள் எஞ்சிய நிலையில் வெற்றி இலக்கைத் தாண்டியது. விராத் கோலி 82 ஓட்டங்களைப் பெற்று சிறப்பாட்டக்காரராக தெரிவானார். இந்திய அணி இலங்கைக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் சர்வதேச, ரீ-ட்வென்ரி சுற்றுத்தொடர்களின் சகல போட்டிகளிலும் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி