Sri Lanka Brodcasting Corporation

Mon10232017

Last updateMon, 23 Oct 2017 8am

விளையாட்டு

இந்திய - பாகிஸ்தானிய கிரிக்கட் உறவுகளில் புதிய அத்தியாயம் பற்றி நம்பிக்கை வெளியிடும் PCB யின் புதிய தலைவர்

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் சுமூகமடைந்ததும், இந்தியாவுடனான கிரிக்கட் உறவுகளை ஆரம்பிக்கக்கூடியதாக இருக்கும் என பாகிஸ்தான் கிரிக்கட் சபையின் புதிய தலைவர் நஜாம் சேத்தி தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கான கதவுகளை அடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டார். பாகிஸ்தான் கிரிக்கட் சபையின் 30ஆவது தலைவராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நஜாம் சேத்தி ஊடகங்கள் மத்தியில் உரையாற்றினார். எவ்வாறேனும், சுற்றுத்தொடர்கள் ரத்து செய்யப்பட்டதால், பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்காக சர்வதேச கிரிக்கட் பேரவையின் முன்னிலையில் இழப்பீடு கோருவதை நிறுத்தப் போவதில்லை என அவர் கூறினார்.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி