Sri Lanka Brodcasting Corporation

Tue06272017

Last updateMon, 26 Jun 2017 10am

விளையாட்டு

ஐசிசி சம்பியன் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி தகுதி.

ஐ.சி.சி. வெற்றிக்கிண்ண கிரிக்கெட் போட்டி பற்றிய விபரம்:-

தென்னாபிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 44 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றது. குவின்டன் டி கொக் 53 ஓட்;டங்களைப் பெற்றார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 38 ஓவர்களில் 2விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கைத்தாண்டியது. ஷிக்கர் தவான் 78 ஓட்டங்களையும், விராத் கோலி ஆட்டமிழக்காமல் 76 ஓட்டங்களையும் பெற்றனர். இதற்கமைய, இந்திய அணி பி பிரிவில் அரையிறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஏ பிரிவில் இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் அரையிறுதி சுற்றுக்குத் தெரிவாகியுள்ளன.

இன்று இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி காடிவ் நகரில் இன்று இடம்பெறும்.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி