Sri Lanka Brodcasting Corporation

Tue06272017

Last updateMon, 26 Jun 2017 10am

விளையாட்டு

பங்ளாதேஷ் அணியின் 100 ஆவது ரெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்.

இலங்கை – பங்ளாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரெஸ்ட் போட்டி இன்று பீ.சரவணமுத்து மைதானத்தில் ஆரம்பமாகிறது.

இந்தப் போட்டி காலை பத்து மணியளவில் ஆரம்பமாகும். இது பங்ளாதேஷ் அணியின் 100ஆவது ரெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்க விடயம். இதனை முன்னிட்டு பங்ளாதேஷ் வீரர்களை வாழ்த்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் விசேட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

இந்தப் போட்டி பற்றி கருத்து வெளியிட்ட இலங்கை அணியின் தலைவர் ரங்கன ஹேரத், முதற் போட்டியில் வெற்றிபெற்றுள்ளதால் நம்பிக்கையுடன் களமிறங்குவதாக குறிப்பிட்டார்.

100ஆவது ரெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் மகிழச்சி அடையப் போவதாக பங்ளாதேஷ் அணியின் தலைவர் முஸ்பிக்குர் ரஹ்மான் கூறினார்.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி