Sri Lanka Brodcasting Corporation

Sun12172017

Last updateSun, 17 Dec 2017 8am

விளையாட்டு

இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் சர்வதேச போட்டி இன்று விசாகப்பட்டணத்தில்

 

இலங்கை - இந்தியஅணிகளுக்குஇடையிலானமூன்றாவதும்இறுதியுமானஒருநாள்சர்வதேசகிரிக்கெட்போட்டிஇன்றுவிசாகப்பட்டணத்தில்இடம்பெறும். பிற்பகல் 1.30 அளவில்போட்டிஆரம்பமாகும். ஏற்கனவேஇடம்பெற்றபோட்டிகளில்ஒருபோட்டியில்இலங்கைஅணியும்மற்றையபோட்டியில்இந்தியஅணியும்வெற்றிபெற்றுள்ளன. இதனால்இன்றையபோட்டிஒருதீர்மானம்மிக்கபோட்டியாகவிளங்குகின்றது.

அரசியலில் பிரவேசிக்க தயாராகும் பிறேசிலின் காற்பந்தாட்ட நட்சத்திரம் ரொனால்டினோ

பிறேசிலுக்கு உலக கிண்ணத்தை வென்று கொடுத்து காற்பந்தாட்ட வீரர் ரொனால்டினோ அரசியலில் பிரவேசிக்க தயாராகிறார். இந்த விடயத்தை ரொனால்டினோவின் சகோதரரும் முகவருமான ரொபட்டோ அஸ்சிஸ் உறுதி செய்துள்ளார்.

ரொனால்டினோவுக்கு 37 வயதாகிறது. அடுத்தாண்டு நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் பழமைவாத பற்றியோட்டா கட்சியின் மூலம் பிறேசிலின் செனட் சபைக்கு போட்டியிட வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த வீரர் இரு தடவைகள் பிபாவின் மிகச் சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டவர்.

ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் ரி-20 சுற்றுத்தொடரை மீண்டும் நடத்துவது பற்றி பரிசீலனை.

2019ஆம் ஆண்டிற்குள் ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் சுற்றுத்தொடரையோ, அதற்கு சமமான ரி-20 சுற்றுத்தொடரையோ நடத்துவது பற்றி ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் ஆராய்ந்து வருகிறது. இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்திய போதும், அறுதியான தீர்மானங்கள் எதுவும் கிடையாதென மேலதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நாட்டினதும் எதிர்கால கிரிக்கட் சுற்றுத்தொடர் பற்றிய விபரங்களை அறிவிக்கும் நிகழ்ச்சி நிரலில், 2019ஆம் ஆண்டு ஓகஸ்ட் முதல் செப்டெம்பர் வரையான காலப்பகுதி வேறாக ஒதுக்கப்பட்டுள்ளதென தெரிகிறது.

நீண்ட நாள் காதலியை நேற்று இத்தாலியில் கரம்பற்றிய இந்திய அணியின் தலைவர் விராத் கோலி.

இந்திய கிரிக்கட் அணியின் தலைவர் விராத் கொஹ்லி, பொலிவூட் நடிகை அனுஷ்கா சர்மாவைக் கரம்பற்றியுள்ளார். இந்தத் திருமணம் நேற்று இத்தாலியில் நடைபெற்றது. திருமண வைபவம் ரகசியமான முறையில் இடம்பெற்றதாகவும், இரு குடும்பங்களுக்கும் நெருக்கமானவர்கள் மாத்திரமே பங்கேற்றதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி

Read more...

இலங்கை, கட்டார் காற்பந்தாட்ட சங்கங்களுக்கு இடையிலான உடன்படிக்கை.

இலங்கை, கட்டார் காற்பந்தாட்ட சங்கங்களுக்கு இடையிலான உடன்படிக்கை கைச்சாத்திடப்படுகிறது. ஐந்தாண்டு கால திட்டத்தின் கீழ் காற்பந்தாட்ட விளையாட்டின் அபிவிருத்திக்கு வித்திடுவது உடன்படிக்கையின் நோக்கமாகும் என இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வா தெரிவித்தார். இதன் கீழ் இலங்கை காற்பந்தாட்ட வீரர்கள் கட்டாரில் பயிற்சிகளை பெறும் வாய்ப்பை பெறுவார்கள் என அவர் கூறினார். கட்டார், காற்பந்தாட்ட விளையாட்டில் பெரும் முன்னேற்றத்தை சந்தித்துள்ளது. 2022ஆம் ஆண்டில் உலகக் கிண்ண காற்பந்தாட்ட சுற்றுத்தொடரை கட்டார் ஏற்று நடத்தவுள்ளமையும் குறிப்பி

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட்டில் தினேஷ் சந்திமால் சாதனை

புதுடில்லியில் நடைபெறும் இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது ரெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் முடிவில் இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

Read more...

இலங்கை ஒருநாள் சர்வதேச, ரி-20 அணிகளின் தலைமைப் பொறுப்பு திஸர பெரேராவிடம்.

நாட்டுக்கு பெருமை சேர்ப்பது இலங்கை அணி வீரர்கள் ஒவ்வொரிவரினதும் இலட்சியமாகும் என திஸர பெரேரா தெரிவித்துள்ளார். இலங்கையின் ஒருநாள் சர்வதேச மற்றும் ரி-20 அணிகளுக்கான தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்னர் அவர் கருத்து வெளியிட்டார். சகல அணிகளும் கடினமான சந்தர்ப்பங்களை கடந்து செல்ல வேண்டிய தேவை இருக்கிறது. இலங்கை அணியின் வீரர்களும் மனநிலையில் ஏற்பட்ட பாதிப்புக்களை கடந்து சென்று நாட்டுக்காக சிறப்பாக பாடுபடுவார்கள் என திஸர பெரேரா நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.

இலங்கை, இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்

இலங்கை, இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று நாக்பூரில் ஆரம்பமாகிறது.

இந்தப் போட்டி இன்று காலை 9.30க்கு வீசிஏ மைதானத்தில் தொடங்கும்.

இந்த மைதானத்தின் ஆடுகளம் கொல்கத்தா ஆடுகளத்தைப் போன்று பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான அமைய மாட்டாதென இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்துள்ளார்.

வேகப் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளம் அமைய வேண்டும் என்பது இந்திய அணியின் விருப்பம். அதனடிப்படையில் வீசிஏ மைதான ஆடுகளம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறதென சந்திமால் குறிப்பிட்டார்.

அவர் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்டார்.

சந்திக்க ஹத்துருசிங்கவை பயிற்றுவிப்பாளராக நியமிப்பது பற்றி ஸ்ரீலங்கா கிரிக்கட் பேச்சுவாh;த்தை

இலங்கை கிரிக்கட் அணியின் தேசிய பயிற்றுவிப்பாளH பதவிக்கு சந்திக்க ஹத்துருசிங்கவை நியமிப்பது பற்றி அவரது சட்டத்தரணிகள் பேச்சுவாHHத்தை நடத்தி வருவதாக ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் தலைவH திலங்க சுமத்திபால தொpவித்துள்ளாH.

Read more...

இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று கொல்கத்தாவில் ஆரம்பம்.

இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கட் சுற்றுத்தொடரின் ஆரம்பத்தை குறிக்கும் வகையில், முதலாவது டெஸ்ட் போட்டி முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகிறது. இந்தப் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இடம்பெறும். இலங்கை அணி எட்டு வருடகால இடைவெளியின் பின்னர் இந்திய மண்ணில் டெஸ்;ட் போட்டியொன்றில் களமிறங்குகிறது. இந்திய அணியை வலுவான முறையில் எதிர்கொள்ள தயாராவதாக இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்தார். அவர் நேற்று கொல்கத்தாவில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தகவல் அறிவித்தார்.

அதேவேளை, இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக சந்திக்க ஹத்துருசிங்கவை நியமிப்பது பற்றி விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர சமிக்ஞை காட்டியுள்ளார். அவர் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றினார். முன்னாள் டெஸ்ட் ஆட்டக்காரரான சந்திக்க ஹத்துருசிங்க பங்களாதேஷ் அணிக்கான தேசிய பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து சமீபத்தில் விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி