Sri Lanka Brodcasting Corporation

Sat11182017

Last updateSat, 18 Nov 2017 1pm

விளையாட்டு

இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று கொல்கத்தாவில் ஆரம்பம்.

இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கட் சுற்றுத்தொடரின் ஆரம்பத்தை குறிக்கும் வகையில், முதலாவது டெஸ்ட் போட்டி முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகிறது. இந்தப் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இடம்பெறும். இலங்கை அணி எட்டு வருடகால இடைவெளியின் பின்னர் இந்திய மண்ணில் டெஸ்;ட் போட்டியொன்றில் களமிறங்குகிறது. இந்திய அணியை வலுவான முறையில் எதிர்கொள்ள தயாராவதாக இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்தார். அவர் நேற்று கொல்கத்தாவில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தகவல் அறிவித்தார்.

அதேவேளை, இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக சந்திக்க ஹத்துருசிங்கவை நியமிப்பது பற்றி விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர சமிக்ஞை காட்டியுள்ளார். அவர் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றினார். முன்னாள் டெஸ்ட் ஆட்டக்காரரான சந்திக்க ஹத்துருசிங்க பங்களாதேஷ் அணிக்கான தேசிய பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து சமீபத்தில் விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிள்ளைகள் சமூக ஊடகங்களில் நேரத்தை செலவழிக்காமல் வெளியில் விளையாட வேண்டும் என இந்திய அணித்தலைவர் தெரிவிப்பு

பிள்ளைகள் சமூக வலைத்தளங்களில் கூடுதல் நேரத்தை விரயம் செய்யாமல் வெளியிடங்களில் கூடுதலாக விளையாட வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இந்நாட்களில் பிள்ளைகள் வெளியிடங்களில் விளையாடுவதை விட கூடுதலாக வீடியோ கேம்களுக்கு அடிமையாகி உள்ளனர். உடல் ரீதியான செயற்பாடுகள் அவசியம் என கோஹ்லி குறிப்பிட்டார்.

பியூமா நிறுவனத்துடன் இணைந்து வன்-எயிட் என்ற உற்பத்தியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.

இது பிரபல பல்பொருள் அங்காடியில் இடம்பெறும். இங்கு சில பிள்ளைகளுடன் கோஹ்லி கூடைப்பந்தாட்ட, காற்பந்தாட்ட விளையாட்டுக்களில் ஈடுபட்டார்.

19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான ஆசிய கிரிக்கட் சுற்றுத்தொடர் இன்று மலேசியாவில் ஆரம்பம்.

19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான ஆசிய கிண்ண சுற்றுத்தொடர் இன்று மலேசியாவில் ஆரம்பமாகிறது. இது எதிர்வரும் 20 ஆம் திகதி முடிவடையும். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான், மலேசியா, நேபாளம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் சுற்றுத்தொடரில் பங்கேற்கின்றன. இதனை ஆசிய கிரிக்கட் பேரவை ஏற்பாடு செய்கிறது. இலங்கை அணியை கமிந்து மென்டிஸ் வழிநடத்துகிறார். வளர்ந்துவரும் நாடுகளில் கிரிக்கட் விளையாட்டை வளர்ப்பது சுற்றுத்தொடரின் நோக்கமாகும்.

2018ம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டிக்கு ரஷ்யா தயார் நிலையில்.

2018ம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தர்ட்ட போட்டிக்காக மொஸ்கோ நகரம் உட்பட ரஷ்யாவின் ஐந்து நகரங்களை தயார்ப்படுத்தும் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக அந்நாட்டின் பிரதிப் பிரதமர் விதாலி முத்கோ தெரிவித்துள்ளார். 2018 உலக கிண்ண உதைபந்தாட்டப் போட்டி அடுத்த வருடம் ஜுன் மாதம் 14ம் திகதி முதல் ஜுலை மாதம் 15ம் திகதி வரை ரஷ்யாவின் 11 நகரங்களில் நடைபெறும். உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி ரஷ்யாவில் முதல் தடவையாக நடைபெறவுள்ளது.

இலங்கை அணிக்கான நிரந்தர பயிற்றுவிப்பாளர் பற்றி ஜனவரியில் அறிவிக்கத் தயாராகும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் அணிக்கான நிரந்தரப் பயிற்றுவிப்பாளரின் நியமனம் பற்றி ஜனவரி முதலாம் திகதி ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவிக்கவிருப்பதாக அதன் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார். இதற்கான விளம்பரத்தை பிரசுரித்து, விண்ணப்பித்தவர்களுடன் கலந்தாலோசித்திருப்பதாக திரு.ஆஸ்லி டீ சில்வா தெரிவித்தார். விண்ணப்பித்தவர்களின் பெயர்களை அவர் வெளியிடவில்லை. ஆனால், ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களும், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். கடந்த ஜூன் மாதம் கிரஹாம் போர்ட் பதவி விலகியதைத் தொர்ந்து இலங்கை கிரிக்கெட் அணிக்காக நிரந்தர பயிற்றுவிப்பாளர் எவரும் நியமிக்கப்படவில்லை. நிக் போத்தாஸ் தற்காலிக பயிற்றுவிப்பாளராக கடமையாற்றுகிறார்.

எட்டு வருடங்களின் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணி நாளை பாகிஸ்தானில் பங்கேற்பு.

இலங்கைக்கும் - பாகிஸ்தான் கிரிக்கட் அணிகளுக்கிடையில்;; நாளை லாஹுரில் நடைபெறவுள்ள மூன்றாவது ரி- ருவன்ரி கிரிக்கட் போட்டி மாலை 6.00 மணிக்கு ஆரம்பமாகவிருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது. இந்த போட்டி முன்னர்  இரவு 7.00 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என்று கிரிக்கட் பேரவை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. காலநிலையின் காரணமாகவே புதிய தீர்;மானம் மேற்கொள்ளப்பட்டதாக சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஆரம்ப வைபவம் மாலை 4.45 க்கு ஆரம்பமாகவுள்ளது. பார்வையாளர்கள் பிற்பகல் 3.00 மணிக்கு மைதானத்திற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் இலங்கை அணி லாஹுருக்கு வருகை தருமென பாகிஸ்தான் கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது. போட்டியை முன்னிட்டு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக பாகிஸ்தானிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரலுவலகம் அறிவித்துள்ளது. உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் ஜயநாத் லொக்குகட்டகொடகே தகவல் தருகையில், பாகிஸ்தான் இராணுவம், பொலிஸார் மற்றும் ஏனைய பாதுகாப்பு பிரிவினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகக் குறிப்பிட்டார். நாளை நடைபெறும் போட்டியைப் பார்வையிடுவதற்காக பாகிஸ்தான் மக்கள் விசேட ஆர்வம் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். 2009ம் ஆண்டு மார்ச் மாதம் லாஹுரில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இதேபோன்று வெளிநாடொன்றின் தேசிய கிரிக்கெட் குழு பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். எட்டு வருடங்களின் பின்னர், இலங்கை - பாகிஸ்தானில் கலந்து கொள்ளும் இந்தப் போட்டியைப் பார்வையிடுவதற்காக விளையாட்டுத்துறை  அமைச்சர் என்ற ரீதியில் தான் கலந்து கொள்வதாகவும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது ரி-ருவென்டி போட்டியில் இலங்கை தோல்வி

நேற்று அபுதாபியில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான முதல்
ரி-ருவென்டி போட்டியில் பாகிஸ்தான் ஏழு விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19வது ஓவரில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 102 ஓட்டங்களை எடுத்தது. பாகிஸ்தான் வீரர்கள் 18வது ஓவரில் வெற்றியிலக்கை அடைந்தார்கள்.

இரண்டாவது போட்டி இன்றிரவு 9.30க்கு ஆரம்பமாகும். இந்த சுற்றுத்தொடரின் மூன்றாவது போட்டி பாகிஸ்தான் லாகூரில் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.

இலங்கை அணி எட்டு வருடகால இடைவெளிக்குப் பின்னர் பாகிஸ்தான் மண்ணில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியொன்றில் இலங்கைக்கு இரண்டு தங்கப்பதக்கங்கள்.

 

நெதர்லாந்தில்நடைபெற்றஇந்தோவன்சர்வதேசகுத்துச்சண்டைபோட்டியில்இரண்டுதங்கப்பதக்கங்கள்உட்பட 7 பதக்கங்களைஇலங்கைவீரவீராங்கனைகள்வென்றுள்ளனர்ஹெலகுளோத்தின்விளையாட்டுச்சங்கத்தைசேர்ந்ததிவங்கரணசிங்கவும்ஸ்லிம்லைன்விளையாட்டுசங்க்ததைசேர்ந்ததிலிந்துசபரமாதுவும்தங்கப்பதக்கம்வென்றுள்ளனர்

Read more...

தொடர் தோல்விக்கு பொறுப்பேற்பதாக இலங்கை ஒருநாள் அணியின் தலைவர் உப்புல் தரங்க கூறுகிறார்.

ஐக்கிய அரபு எமிரேற்ஸில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஐந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் இலங்கை அணி அடைந்த தோல்விக்கு தாம் பொறுப்பேற்பதாக ஒருநாள் அணியின் தலைவர் உப்புல் தரங்க தெரிவித்துள்ளார். தாம் அணியின் தலைவராக தொடர வேண்டுமா என்பதை தெரிவாளர்கள் தீர்மானிக்க வேண்டும் என தரங்க குறிப்பிட்டார். அவர் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றினார். நேற்றைய ஐந்தாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் இலங்கை அணி படுதோல்வியடைந்தது. இது ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இலங்கை அணி எதிர்கொண்ட 12 ஆவது தொடர் தோல்வியாகும்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய தரப்படுத்தலுக்கு அமைவாக ஒருநாள் துடுப்பாட்ட வீரர்கள் மத்தியில் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஏ.வி டிவிலியர்ஸ் முன்னணியில் உள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய தரப்படுத்தலுக்கு அமைவாக ஒருநாள் துடுப்பாட்ட வீரர்கள் மத்தியில் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஏ.வி டிவிலியர்ஸ் முன்னணியில் உள்ளார். இவர் ஒருநாள் துடுப்பாட்ட தரப்படுத்தலில் 14வது முறையாக முன்னணி வகிக்கின்றார். பங்காதேஷுன் நடைபெற்ற ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 176 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இவருக்கு கிடைத்துள்ள புள்ளிகள் 879 ஆகும். பட்டியலில் இரண்டாம் இடத்தில் இந்திய அணி வீரர் விராத் கோலி இடம்பெற்றுள்ளார். இவர் 877 புள்ளிகளைப் பெற்றுள்ளார். அவுஸ்திரேலிய அணியைச் சேர்ந்த டேவிற் வோர்ணர் 865 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் முன்றாம் இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் இலங்கை அணி இடம்பெறவில்லை.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி