Sri Lanka Brodcasting Corporation

Thu05282020

Last updateMon, 24 Feb 2020 8pm

உள்ளூர்

பாரிய அளவிலான ஊழல் மோசடிகளை விசாரிக்கும் விசேட நீதிமன்றம் அடுத்த மாதம்

 

பாரியளவிலான ஊழல் மோசடிகளை விசாரிக்கும் விசேட நீதிமன்றங்களின் முதலாவது நீதிமன்றம் அடுத்த மாதம் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். அவர் எமது நிலையத்திற்கு வழங்கிய நேர்காணலில் தகவல் அறிவித்தார்.

திருடர்கள் பிடிக்கப்படுவதில்லை என மக்கள் குறை கூறுகிறார்கள். ஆனால். திருடர்கள் பிடிக்கப்படுகிறார்கள். விசாரிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு எதிராக முறையாக வழக்கு தொடுத்து சாட்சிகளின் அடிப்படையில் தண்டனை வழங்க வேண்டிய தேவை உள்ளது. இதனை பொதுவான நீதிக் கட்டமைப்பில் செய்ய முடியாது. இதற்காகவே விசேட நீதிமன்றங்கள் ஸ்தாபிக்கப்படுகின்றன. முதல் நீதிமன்றம் ஜூலை இரண்டாம் வாரம் இயங்கத் தொடங்கும் என பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தல் விருப்பத்தெரிவு வாக்களிப்பு முறைக்கமைய டிசெம்பர் மாதத்தில்

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல் விருப்பத் தெரிவு வாக்களிப்பு முறைக்கு அமைய நடைபெறுமென அமைச்சர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

இதற்குரிய திருத்தப் பிரேரணை செப்டெம்பர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. டிசம்பர் மாதம் அளவில் தேர்தலை நடத்தக்கூடியதாக இருக்குமென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அவர் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றினார். இந்த மாநாடு நேற்று இடம்பெற்றது.

நான்கு மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்.

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நாளையும், நாளை மறுதினமும் கொழும்பு, கம்பஹா, கண்டி, களுத்துறை மாவட்டங்களில் இடம்பெறவுள்ளது. 600 பேர் கொண்ட குழு இது தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தப்படவிருக்கிறது. இந்த ஆண்டில் இதுவரை 22 ஆயிரத்திற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டார்கள். இதில் 23 பேர் மரணமடைந்ததாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் வைத்திய நிபுணர் டொக்டர் பிரசீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

சட்ட மாஅதிபரின் பணிப்புரைக்கும், இணக்கப்பாட்டிற்கும் அமைய, திறைசேரி முறிகள் தொடர்பான சம்பவம் பற்றிய ஆவணங்கள் தொடர்பில் உரிய ஆலோசனைக்கமைய, நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதியின் செயலாளர் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

சட்ட மாஅதிபரின் பணிப்புரைக்கு அமைய, திறைசேரி முறிகள் தொடர்பான சம்பவம் பற்றிய ஆவணங்கள் தொடர்பில் உரிய ஆலோசனைக்கமைய, நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஜனாதிபதியின் செயலாளர் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார். சம்பவங்கள் தொடர்பான உரிய ஆவணங்கள் சட்ட ரீதியான முறையில் ஜனாதிபதி செயலகத்திடமிருந்து தமக்குக் கிடைக்கும் வரையில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்ட வேண்டாம் என்றும் சபாநாயகர் பாராளுமன்;ற உறுப்பினர்களை கேட்டுள்ளார்.

விவசாயிகளை பாதுகாத்து, விவசாயத்துறை இலாபமீட்டும் துறையாக மாற்றி அமைக்கப்படும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்

விவசாயிகளை பாதுகாத்து விவசாயத்துறை இலாபமீட்டும் துறையாக மாற்றி அமைக்கப்படும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தேசிய உற்பத்திக்கு விவசாயத்துறையின் கூடுதலான ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வது இதன் இலக்காகும்.

Read more...

விவசாயக் குடியேற்றங்களில் வாழும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் புதிய வேலைத்திட்டம்

விவசாயக் குடியேற்றங்களில் வாழும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் புதிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது. அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் பணிப்புரைக்கமைய, இந்த நடமாடும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவிருக்கிறது. முதலாவது வேலைத்திட்டம் எதிர்வரும் சனிக்கிழமை ராஜாங்கனையில் இடம்பெறவிருக்கிறது.

மோட்டார் சைக்கிள்களுக்கும், முச்சக்கர வண்டிகளுக்குமான புதிய வகை பெற்றோல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது

முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் என்பனவற்றிற்கான புதிய பெற்றோல் வகை அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான பரிசோதனை வெற்றிகரமான முறையில் இடம்பெறுவதாகவும் அவர் கூறினார். பெற்றோலியக் கூட்டுத்தாபன வளாகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் உரையாற்றினார். திணைக்களத்திற்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட பொறியியலாளர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வில் அவர் உரையாற்றினார்.

Read more...

வடக்கு, கிழக்குமாகாணங்களின்அபிவிருத்திவேலைத்திட்டங்களைமுன்னெடுப்பதற்காகஜனாதிபதிதலைமையிலானசெயலணி

வடக்கு, கிழக்குமாகாணஅபிவிருத்தித்திட்டங்களைமுன்னெடுத்தல், தொடர்புபடுத்தல், மீளாய்வுசெய்தல்என்பனவற்றிற்கானசெயலணிநியமிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்குமாகாணங்களில்மோதல்கள்முடிவடைந்ததன்பின்னர்இந்தப்பிரதேசங்களில்சமூகமற்றும்பொருளாதாரஅபிவிருத்திக்கானபல்வேறுநடவடிக்கைகள்நடைமுறைப்படுத்தப்பட்டன. ஆனால், வடக்கு, கிழக்குமாகாணமக்களின்வாழ்வாதாரத்தைமேம்படுத்தஇதன்மூலம்போதுமானஒத்துழைப்புகிடைக்கவில்லை. இதனால், அரசாங்கநிறுவனங்களைஇந்தப்பிரதேசங்களில்நடைமுறைப்படுத்தும்அபிவிருத்திவேலைத்திட்டங்களைமுன்னெடுக்கவும், மீளாய்வுசெய்யவும்தமதுதலைமைத்துவத்தின்கீழானசெயலணிஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகஜனாதிபதிமைத்ரிபாலசிறிசேனஅமைச்சரவைக்குஅறிவித்துள்ளார்.

பிரதமர்வடக்கு, கிழக்குமாகாணங்களின்ஆளுநர்கள், பிரதமசெயலாளர்கள், ஆயுதப்படை, பொலிஸ்என்பனவற்றின்மாகாணங்களுக்குபொறுப்பானஅதிகாரிகள்உட்படஏனையதரப்புக்களின்பிரதிநிதிகள்ஆகியோர்குழுவில்அங்கம்வகிக்கிறார்கள்.

இதேவேளை, வடக்கு, கிழக்குமாகாணங்களில்நிலவியமோதல்கள், அரசியல்அமைதியற்றநிலை, பலவந்தமாககாணாமல்ஆக்கப்பட்டமைபோன்றவிடயங்களினால்பாதிக்கப்பட்டவர்களுக்குஇழப்பீடுவழங்குவதற்கானஅலுவலகமும்ஸ்தாபிக்கப்படவிருக்கிறது. இதற்குஅமைச்சரவையின்அங்கீகாரமும்கிடைத்துள்ளது. இதற்கமைய, உரியசட்டமூலத்தைவர்த்தமானியில்பிரசுரித்ததன்பின்னர்பாராளுமன்றத்தின்அங்கிகாரத்திற்காகசமர்ப்பிக்கஅமைச்சரவைஅங்கீகாரம்அளித்துள்ளது. இதுபிரதமர்ரணில்விக்ரமசிங்கசமர்ப்பித்தயோசனையாகும்.

ஸ்ரீலங்காசுதந்திரக்கட்சிவிரிவானகூட்டணியாகஎதிர்வரும்தேர்தல்களில்போட்டியிடும்என்றுகட்சியின்பொதுச்செயலாளர்அறிவித்துள்ளார்

அனைத்துமுற்போக்குத்தரப்புக்களுடனும்கலந்துரையாடிவிரிவானகூட்டணியாகஸ்ரீலங்காசுதந்திரக்கட்சிஎதிர்வரும்தேர்தலில்போட்டியிடும்என்றுகட்சியின்பொதுச்செயலாளர்பேராசிரியர்ரோஹனலக்ஷ்மன்பியதாஸதெரிவித்துள்ளார்.

கட்சியின்மறுசீரமைப்புப்பணிகள்நாடளாவியரீதியில்இடம்பெறுகின்றன. மக்களுடன்கலந்துரையாடிஅடிமட்டத்திலிருந்துஸ்ரீலங்காசுதந்திரக்கட்சிமீண்டும்கட்டியெழுப்பப்படவிருக்கிறதுஎன்றும்அவர்கூறினார். இலங்கைஒலிபரப்புக்கூட்டுதுத்தாபனத்தில்இன்றுகாலைஇடம்பெற்றசுபாரதிநிகழ்ச்சியில்பேராசிரியர்லக்ஷ்மன்பியதாஸகருத்துவெளியிட்டார்.

கடந்தஉள்ளுராட்சிமன்றத்தேர்தலின்பெறுபேறுகள்அரசாங்கத்தின்தவறுகளுக்குமக்கள்வழங்கியபதில்களாகும். இதுபற்றிஅரசாங்கம்கூடுதல்கவனம்செலுத்தவேண்டு;ம்என்றும்ஸ்ரீலங்காகட்சியின்பொதுச்செயலாளர்வலியுறுத்தினார்.

கதிர்காமம்கிரிவெஹரவிஹாரையின்விஹாராதிபதிமீதுதுப்பாக்கிப்பிரயோகம்மேற்கொள்ளப்பட்டமைபற்றிபொலிஸார்விரிவானவிசாரணைநடத்துகிறார்கள்

கதிர்காமகிரிவெஹரவிஹாரையின்விஹாராதிபதிசங்கைக்குரியகொப்பவக்கதம்மிந்ததேரர்மீதுநடத்தப்பட்டதுப்பாக்கிச்சூடுபற்றியவிரிவானவிசாரணைகள்ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நேற்றிரவு 11 மணியளவில்இந்தசம்பவம்இடம்பெற்றிருக்கிறது. துப்பாக்கிப்பிரயோகம்மேற்கொண்டமூன்றுசந்தேகநபர்களும்தப்பிச்சென்றிருக்கிறார்கள். அவர்கள்பயணித்தஜீப்வண்டிகண்டெடுக்கப்பட்டுள்ளதாகபொலிஸ்தலைமையகம்அறிவித்துள்ளது. துப்பாக்கிபிரயோகத்திற்குஉள்ளானகொப்பவக்கதம்மிந்ததேரரும், மற்றுமொருதேரரும்தற்சமயம்ஹம்பாந்தோட்டைவைத்தியசாலையில்சிகிச்சைபெற்றுவருகிறார்கள்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி