Sri Lanka Brodcasting Corporation

Sun04212019

Last updateTue, 20 Nov 2018 3pm

உள்ளூர்

தொழில் வாய்ப்பு தொடர்பான புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.


இலங்கையின் தனி தொழிவாய்ப்பு சட்டத்தை அறிமுகப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.

அமுலில் உள்ள சட்டத்தை இணைத்து இது அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் கூறினார். ஜெனீவாவில் இடம்பெற்ற உலக தொழிலாளர் அமைப்பின் 107ஆவது கூட்டத்தொடரில் அவர் உரையாற்றினார்.

ஜனாதிபதி பணிக்குழுவின் முன்னாள் பணிப்பாளருக்கு எதிர்வரும் 19ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல்.

இரண்டு கோடி ரூபா லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் ஜனாதிபதி பணிக்குழுவின் முன்னாள் தலைவர் கே.மஹாநாம, அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி.திஸாநாயக்க ஆகியோர் எதிர்வரும் 19ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க்பபட்டுள்ளார்கள். கொழும்பு பிரதம நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு வழங்கப்பட்டது.

உலக சுகாதார தினத்திற்கு அமைவாக யாழ் நகரில் பல்வேறு வேலைத்திட்டங்கள்.


உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வட மாகாணத்தில் யாழ் நகரை மையமாகக் கொண்டு பல்வேறு வேலைத்திட்டங்கள் அமுலாகின்றன.

இதற்கமைவாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மரநடுகை வேலைத்திட்டம் யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகில் இன்று இடம்பெற்றது. பல்வேறு வகையான ஆறாயிரம் மரக்கன்றுகள் இதன் போது நாட்டி வைக்கப்பட்டன.

இராணுவம், பொலிஸார், யாழ் மாநகரசபை என்பனவற்றின் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டார்கள். யாழ்ப்பாணத்தில் 16 பாடசாலைகளு இந்த வேலைத்திட்டத்தில் இணைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் இன்று தெரிவு செய்யப்படவுள்ளார்

பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு இன்று பிற்பகல் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

பிரதி சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Read more...

இலங்கையின் மொத்த வெளிநாட்டு ஒதுக்கம் இந்த ஆண்டில் தொள்ளாயிரத்து 50 கோடி அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்கும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது

நாட்டின் வெளிநாட்டு நாணய ஒதுக்கம் இந்த வருட இறுதியில் தொள்ளாயிரத்து 50 கோடி அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்கும் என்று இலங்கை மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. நாட்டின் வெளிநாட்டு ஒதுக்கம் தற்சமயம் 770 கோடி அமெரிக்க டொலர்களாகும்.

இதேவேளை, இலங்கை பொருளாதாரத் துறையில் அடைந்துள்ள முன்னேற்றங்களில் சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளது.

தபால் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்று நள்ளிரவு முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது

தபால் மற்றும் தொலைத்தொடர்பாடல் சங்கம் முன்னெடுக்கும் இந்த தொழிற்சங்க நடவடிக்கை இன்று நள்ளிரவு முடிவடையும் என சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.கே.காரியவசம் தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்க நடவடிக்கை முடிவடைந்தவுடன் தபால் விநியோகப் பணிகள் துரிதப்படுத்தப்படவிருக்கின்றன. தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு துரிதமான முறையில் தீர்வு வழங்கப்படும் என தபால்துறை அமைச்சர் உறுதியளித்ததைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

விவசாய அபிவிருத்தி தேசிய சட்டமூலம் வெளியிடப்பட்டுள்ளது

விவசாய அபிவிருத்தி தொடர்பான தேசிய சட்டமூலம் வெளியிடப்பட்டுள்ளது. விவசாயத்துறையின் சுபீட்சத்திற்காக முழுமையான தேசிய கொள்கை தயாரிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஒத்துழைப்புடன் இது தயாரிக்கப்பட்டுள்ளது. சட்ட மூலம் அமைச்சர் மஹி;ந்த அமரவீரவிடம் நேற்று கையளிக்கப்பட்டது. இந்த தேசிய கொள்கை சட்டமூலம் அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.

Read more...

இன்று உலக சுற்றாடல் தினம் - வாழ்க்கை முறையை மாற்றுவதன் அவசியத்தை வலியுறுத்தும் ஜனாதிபதி மற்றும் பிரதமர்

சுற்றாடல் மாசடைவதால் உயிர்கள் மீது தொடுக்கப்படும் அச்சுறுத்தலைப் புரிந்துகொண்டு சுற்றாடல் நேய வாழ்க்கை முறையை அனுசரிப்பதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

Read more...

சுற்றாடல் பாதுகாப்பு சகலரதும் தட்டிக்கழிக்க முடியாத பொறுப்பு – ஜனாதிபதி

சுற்றாடலைப் பாதுகாக்கும் முயற்சியில் தமது செயற்பாடுகளை ஒரு தினத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல் வருடம் பூராவும் முன்னெடுக்க திடசங்கற்பம் பூணுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

Read more...

மட்டக்களப்பில் மனித – யானை நெருக்கடிக்குத் தீர்வு – அமைச்சர் சரத் பொன்சேகா உறுதி

மட்டக்களப்பு மாவட்டத்தில் தீவிரம் பெற்றுள்ள காட்டு யானைகளின் தொல்லைக்கு தீர்வு காணும் நோக்கில் தொப்பிகலையை அண்டிய பகுதியில் மின்சார வேலிகள் அமைக்கப்படும்.

இதற்கு மூன்று கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகனேரி பிரதேசத்திற்கு சென்று நிலைமையை நேரில் கண்டறிந்த பின்னர் அவர் கருத்து வெளியிட்டார்.

Read more...

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி