Sri Lanka Brodcasting Corporation

Thu05282020

Last updateMon, 24 Feb 2020 8pm

உள்ளூர்

உயர்தரத்திலான திரைப்பட நூல்களும், நாடகங்;களும் அறிமுகம் செய்வதற்கான முறையான வேலைத்திட்டம் அவசியம் என்று ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்

கலைரசனையை மேம்படுத்துவதற்காக தரம் வாய்ந்த திரைப்படப் புத்தகங்களும், தொலைக்காட்சி நாடகங்களையும், புத்தகங்களையும் அறிமுகம் செய்வதற்கான நடைமுறைகள் அறிமுகபடுத்தப்பட வேண்டுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கலைஞர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் அவர் கருத்து வெளியிட்டார். திரைப்படம், நாடகம் ஆகிய துறைகள் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகளினால், இந்த துறையுடன் தொடர்புபட்டவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றியும் ஜனாதிபதிக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. கொழும்புக்கு வெளியே உரிய தரத்துடன் கூடிய திரையரங்குகள் இல்லாமையும் திரைப்படத்துறைக்கான பாதிப்பாகும் என்றும் கலைஞர்கள் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டினார்கள்.

ஹிட்லரைப் போன்ற ஆட்சியாளர் நாட்டுக்கு அவசியமில்லை என்று கலைஞ்ர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

மிலேச்சத்தனத்தை தோற்கடித்து முன்னோக்கிச் செல்லும் சமூகத்திற்கு ஹிட்லரைப் போன்ற ஆட்சியாளர்கள் அவசியமில்லை என்று கலைஞர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். ஹிட்லரைப் போன்ற ஆட்சியாளர்களை எதிர்பார்ப்பது ஆபத்தான நிலையாகும் என்றும் அவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

ஜனாதிபதி தேர்தலின்போது மஹித்த ராஜபக்ஷவுக்கு சீனாவிடம் இருந்து பணம் கிடைத்தமை பற்றி விசாரிப்பதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீன அரசாங்கத்திடம் இருந்து பணம் பெற்று ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக நியூயோர்;க் ரைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தி பற்றி அரசாங்கம் துரிதமாக விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் கருத்து வெளியிட்டார்.

மாகாணசபைத் தேர்தலை உரிய காலப்பகுதியில் நடத்துமாறு அவர் அரசாங்கத்தை கேட்டுள்ளார்.

மிக் விமான கொடுக்கல் வாங்கல் பற்றி ஐந்து இராணுவ அதிகாரிகளின் வங்கிக் கணக்குகளை பரிசோதிக்க நீதிமன்ற அனுமதி

மிக் விமானக் கொடுக்கல் வாங்கல் பற்றி இராணுவத்தைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகளின் கணக்குகளை பரிசோதிப்பதற்கு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்தன சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அங்கீகாரம் அளித்துள்ளார். சம்பந்தப்பட்ட கமாண்டர் உட்பட ஐந்;து அதிகாரிகளின் 40 வங்கிக் கணக்குகள் தொடர்பான தகவல்களை பொலிஸ் நிதி விசாரணைப் பிரிவுக்க வழங்குமாறு கோட்டை நீதவான் லங்கா ஜயரட்ன உத்தரவிட்டுள்ளார்.

மாகாணசபைத் தேர்தலை துரிதமாக நடத்துவதற்கான பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.


எதிர்வரும் மாகாணசபை தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று இடம்பெற்றது. சபாநாயகர் கரு ஜயசூரிய, மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர், எல்லை நிர்ணய ஆணைக்குழவின் தலைவர், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோர் கலந்துரையாடலில்; பங்கேற்றார்கள். தேர்தலுடன் தொடர்புடைய முக்கிய விடயங்கள் பற்றி இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. மாகாணசபைத் தேர்தலை பழைய மற்றும் புதிய முறைகளின் கீழ் நடத்துவது பற்றியும், எல்லை நிர்ணயம் தொடர்பாகவும், இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக அடுத்த மாதம் 5 ஆம் திகதி பாராளுமன்ற ஒத்திவைப்பு வேளை மீதான விவாதத்தை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டதாக சபாநாயகர் கூறினார்.

பாடசாலை அதிபர் ஒருவருக்கு அநீதியான முறையில் இடமாற்றம் வழங்கிய வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் குற்றவாளியென உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


2008ஆம் ஆண்டில் 11 பேர் காணாமல் போன சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான லெப்டினன் கொமாண்டர் பிரசாத் ஹெட்டியாராச்;சியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் விளக்குமறியலில் வைக்கப்பட்டுள்ள கடற்படையின் முன்னாள் புலனாய்வு சிப்பாய்களுக்கான விளக்க மறியல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க, அவரது மனைவி உட்பட மூன்று பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர் ஒருவருக்கு அநீதியான முறையில் இடமாற்றம் வழங்கிய வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரட்;ன உரிய அதிபருக்கு இரண்டரை இலட்சம் ரூபா அபராதம் செலுத்த வேண்டுமென்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடுமையான ஆட்சி நாட்டு அவசியம் என்ற கூற்றின் மூலம் கடந்த கால ஆட்சியாளர்களின் சுயரூபம் தெளிவாகிறதென அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

மனித உரிமைகளை உறுதிப்படுத்தி கடனை செலுத்திய வண்ணம் நாட்டை முன்னெடுத்துச் செல்லும் அரசாங்கத்திற்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர்நாயகம் சுதர்சன குணவர்த்தன தெரிவித்துள்ளார். கடுமையான ஆட்சி, நாட்டுக்கு அவசியம் என்ற கருத்தின் மூலம் கடந்த  ஆட்சியின் சுயரூபம் தெளிவாகிறதெனவும் அவர் கூறினார். இந்தக் காலப்பகுதியில் மனித உரிமைகள் மாத்திரமின்றி நிதி நிர்வாக கட்டமைப்புககளும் சீர்குலைந்ததாக சுதர்;சன குணவர்த்தன தெரிவித்தார்.

புதிய உள்நாட்டு வருமான சட்டத்தின் கீழ் வரி ஆலோசனை அறிக்கைகளை பெறலாம் என உள்நாட்டு வருமான வரி ஆணையாளர் நாயகம் அறிவிப்பு.

புதிய முதலீட்டையோ, தொழில் முயற்சியையோ தொடங்குகையில் உள்நாட்டு அரசிறை திணைக்களத்திற்கு 25 ஆயிரம் ரூபா செலுத்துவதன் மூலம் தீர்வைகள் பற்றிய ஆலோசனைகளை பெற முடியும் என உள்நாட்டு அரசிறை ஆணையாளர் நாயகம் ஐவன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறை உலகம் முழுவதிலும் அமுலில் உள்ளது. இதற்கு முன்னர் இலங்கையில் தீர்வை ஆலோசனைகளை பெறுவதற்கு வெளித் தரப்பிற்கு இரண்டு லட்சம் ரூபாவிற்கு மேலான தொகையை செலுத்த வேண்டியிருந்தது. இந்தப் பிரச்சினைக்கு பரிகாரம் காணும் நோக்கில் புதிய உள்நாட்டு அரசிறை சட்டத்தின் கீழ் மாற்றங்களை மேற்கொண்டதாக திரு திஸாநாயக்க தெரிவித்தார்.

இந்த நடைமுறை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன சமீபத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை அவர் நிராகரித்தார்.

சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கை மீதான பாராளுமன்ற விவாதத்திற்கு சபை முதல்வர் அனுமதி.

சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கை பற்றி ஆராய அடுத்த பாராளுமன்ற அமர்வில் விவாதமொன்றை பெற்றுத்தர சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல இணக்கம் தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் அங்கத்தவர் தினேஷ் குணவர்தன விடுத்த கோரிக்கையை ஏற்று, விவாதத்தை நடத்த சபை முதல்வர் இணங்கியிருக்கிறார்.

இதன் பிரகாரம், குறித்த விவாதத்தை எதிர்வரும் 18ஆம் திகதியோ, அதற்கு முன்னதாகவோ நடத்துவது பற்றி கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கம் காணப்படும்.

நாட்டின் ஜனநாயக வரம்புகளுக்குள் தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கூறுகிறார்.

குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கும் நடைமுறையை நாட்டின் சட்டவரம்பிற்கும், ஜனநாயக வரம்புகளுக்கும் உட்பட்டவாறு அரசாங்கம் முன்னெடுப்பதாக நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

திருடர்களை பிடித்தல் என்பது, எவர் மீதாவது சந்தேகம் ஏற்பட்டால், துப்பாக்கியை கொண்டு சென்று அவரை சுட்டுக் கொல்வதல்ல. அதைத்தான் முன்னைய ஆட்சியாளர்கள் செய்தார்கள் என கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன குறிப்பிட்டார்.

சட்டவரம்புகளுக்கு உட்பட்டவாறு சந்தேகநபர்களுக்கு முறையாக வாய்ப்பளித்து, யார் குற்றவாளி என்பதை தீர்மானிப்பது அவசியம். தற்போது உரிய நடைமுறைகள் அனுசரிக்கப்படுகின்றன. பலர் நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். இந்த நடைமுறைகள் சரியாக பூர்த்தியடைய கால அவகாசம் தேவை என அவர் மேலும் கூறினார்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி