Sri Lanka Brodcasting Corporation

Thu02212019

Last updateTue, 20 Nov 2018 3pm

உள்ளூர்

மக்களுக்கானஉறுதிமொழிகளைநிறைவேற்றி, ஊடகசுதந்திரத்தையும்ஜனநாயகத்தையும், நல்லாட்சியையும்நிலைநாட்டஅரசாங்கத்தால்முடிந்துள்ளது - கல்வியமைச்சர்அக்கிலவிராஜ்காரியவசம்.

மக்களுக்கானஉறுதிமொழிகளைநிறைவேற்றி, ஊடகசுதந்திரத்தையும்ஜனநாயகத்தையும், நல்லாட்சியையும்நிலைநாட்டஅரசாங்கத்தால்முடிந்துள்ளதுஎனகல்வியமைச்சர்அக்கிலவிராஜ்காரியவசம்தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தைமாத்திரமல்லாதுஅரசதலைவர்களையும்விமர்ச்சிக்கக்கூடியசுதந்திரம்இன்றுஉள்ளதாகஅமைச்சர்கூறினார். குருநாகல் - இப்பாகமுவமத்தியமகாவித்தியாலயத்தில்புதியதொழில்நுட்பக்கட்டடத்தொகுதியைத்திறந்துவைக்கும்நிகழ்ச்சியில்அவர்உரையாற்றினார்.

முன்னையஅரசாங்கத்தின்ஆட்சிக்காலத்தில்அரசாங்கத்தையோ, அரசதலைவர்களையோவிமர்ச்சித்தவர்களைவெள்ளைவான்களில்கடத்தப்பட்டார்கள். இந்தநிலமைஇன்றுஇல்லையெனஅமைச்சர்அக்கிலவிராஜ்காரியவசம்கூறினார்.

பல்கலைக்கழகங்களில் காணப்படும் மனிதாபிமானமற்ற பகிடிவதையை ஒழிப்பதற்காக அனைவரும் பொது வேலைத்திட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டுமென்று ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்

பல்கலைக்கழக கட்டமைப்பில் காணப்படும் மனிதாபிமானமற்ற  பகிடிவதையை ஒழிப்பதற்கு பொறுப்புடன் கூடிய சகல தரப்பினரும் பொது வேலைத் திட்டத்தில் துரிதமாக இணைந்து கொள்வது அவசியம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். தார்மீகத்திற்கு முரணான மனிதாபிமானமற்ற  பகிடி வதைகளினால் கடந்த காலங்களில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கசப்பான அனுபவங்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்ததாகவும் அவர் கூறினார். இவ்வாறான கொடூரமான செயற்பாடுகளின் பி;ன்னணியில் அதிகார வெறி கொண்ட அரசியல் இயக்கங்கள் காணப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இவ்வாறான மாணவ பயங்கரவாதத்தை ஒழிப்பதற்று சகல தரப்புக்களும் தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டுமென்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் ஊடகங்கள் கடுமையான முறையில் ஒடுக்கப்பட்டதாக புரவசி பலய அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது

ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் ஊடகங்கள் கடுமையான முறையில் ஒடுக்கப்பட்டதாக புரவசி பலய அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இந்த காலப்பகுதியில் ஊடகத்துறையுடன் தொடர்புபட்ட 44 பேர் கொலை செய்யப்பட்டார்கள். இது தொடர்பான தகவல்கள் நல்லாட்சி அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டிருப்பதாக அமைப்பின் ஏற்பாட்டாளர் காமினி வியங்கொட தெரிவித்துள்ளார்.

ரிஎன்எல் தொலைக்காட்சி சம்பவம் பற்றி அரசாங்கம் கவலை அடைவதாக ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்

ரிஎன்எல் தொலைக்காட்சி தொடர்பான சம்பவம் பற்றி அரசாங்கம் என்ற ரீதியில் கவலை அடைவதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்  தினேஷ் குணவர்த்தன பாராளுமன்றத்தில்; எழுப்பிய கேள்விக்கு அவர் பதில்; அளித்து உரையாற்றினார். ரிஎன்எல் நிறுவனத்தின் பொல்ஹாவலை ஒளிபரப்பு நிலையத்தின் நிர்வாக நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. வெளிநாடு சென்ற ஜனாதிபதியின் செயலாளர் நாடு திரும்பியதன் பின்னர் இது பற்றி கவனம் செலுத்தப்பட இருப்பதாகவும் அவர் கூறினார்.

நாட்டின் பல பிரதேசங்களிலும் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யலாமென்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மத்திய, சப்ரவமுவ, மேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றர்களைத் தாண்டிய மழை பெய்யலாம். மேற்கு, தெற்கு, வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும், மொனறாகலை மாவட்டத்திலும் மணிக்கு 60 கிலோ மீற்றர்களை தாண்டிய வேகத்தில் காற்று வீசும் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

ஊடகச் சுதந்திரம் குறித்து அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்தார்.

ஊடகச் சுதந்திரம் குறித்து அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்தார். இன்று பாராளுமன்றத்தில், பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன டி.என்.எல் ஒளிபரப்பு நிலையம் குறித்து கேள்வி எழுப்பிய போது அதற்;கு பதிலளித்து பேசுகையிலேயே அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

டி.என்.எல் நிலையத்தின் பொல்கஹவெல ஒளிபரப்பு கோபுரத்திற்கு சீல் வைத்தமை ஏற்றுக் கொள்ள முடியாத விடயம் என்றும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார். கடந்த ஆட்சியின் போது ஊடகத்திற்கு ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் குறித்து மக்கள் இன்னும் மறந்து விடவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண கருத்துத் தெரிவிக்கையில், பொல்கஹவெல ஒளிபரப்பு நிலையத்தை எதுவித நிபந்தனையும் இன்றி மீண்டும் இயங்கச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதுவிடயம் தொடர்பில் எதிர்காலத்தில் நன்கு ஆராய்ந்து பதிலொன்றை தருவதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

கடந்த ஆட்சியின் போது, நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் எதுவித நடைமுறைகளும் இல்லாமல் நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என்று பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா சாடியுள்ளார்.

கடந்த ஆட்சியின் போது, நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் எதுவித நடைமுறைகளும் இல்லாமல் நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என்று பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா சாடியுள்ளார்.

இதனால், தற்சமயம் அரசாங்கத்திற்கு ஆயிரத்து 200 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த அனல் மின் நிலையம் ஆரம்பிக்கப்பட்டு 2014ஆம் ஆண்டு வரை உள்ள ஐந்து வருட காலப்பகுதியில் நிலக்கரி ஒரே நிறுவனத்திடமிருந்தே கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. உலக சந்தையில் நிலக்கரியின் விலைகளில் ஏற்பட்ட மாற்றங்களை கருத்தில் கொள்ளாமல், 35 கோடி டொலருக்கும் அதிகமான பெறுமதியை கொடுத்து நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்டதாக பிரதி அமைச்சர் எமது நிலையத்திற்கு தெரிவித்தார்.

இதனால், அரசாங்கத்திற்கு பத்து கோடி டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளது. இருந்த போதிலும், சமகால அரசாங்கம் முறையாக கேள்விப் பத்திர நடைமுறை மூலம் நிலக்கரி கொள்வனவுகளை மேற்கொண்டு நட்டத்தின் அளவை குறைத்துள்ளது. சமகால அரசாங்கம் மேற்கொண்ட நிலக்கரி கொள்வனவுகளில் எதுவித நட்டமும் ஏற்படவில்லை. உலக சந்தையில் நிலக்கரி கொள்வனவு தொடர்பில் 20 போட்டியாளர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊவா அலுவலகமும் புலம்பெயர் வள நிலையமும் இன்று ஜனாதிபதி தலைமையில் அங்குரார்ப்பணம்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊவா அலுவலகமும் புலம்பெயர் வள நிலையமும் இன்று ஜனாதிபதி தலைமையில் அங்குரார்ப்பணம்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊவா மாகாண அலுவலகமும் புலம்பெயர்ந்தோருக்கான வளநிலையமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று பிற்பகல் மூன்று மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளன.

இவ்விரு கட்டடங்களும் ஹாலிஎல, பதுளை வீதியில் 202ம் இலக்க முகவரியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இவற்றை அமைப்பதற்கு 54 கோடி ரூபாவை அரசாங்கம் செலவிட்டுள்ளது. இங்கு இரண்டு-ஆறு மாடிக் கட்டடங்களும், இரண்டு மாடிக் கட்டடமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இவை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு சொந்தமான காணியில் அமைந்துள்ளன.

வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் 200 பேருக்கு ஒரே தடவையில் வதிவிட பயிற்சி வழங்கும் வசதி புலம்பெயர் வளநிலையத்தில் இருக்கின்றது. இது கொரியா செல்லும் இலங்கையர்களுக்கான பிரதான பயிற்சி நிலையமாகவும் இயங்கும். பணிப்பெண் அல்லாத வேலைவாய்ப்புகளுக்காக ஐந்து நாள் பயிற்சியையும், ஜப்பான் மொழித் தேர்;ச்சி கற்கை நெறிகளையும் வழங்கக் கூடிய வசதிகள் வள நிலையத்தில் இருக்கின்றன.

அவிசாவளை – அஸ்வத்தை இரும்பு பாலம் பிரதமர் தலைமையில் மக்கள் பாவனைக்கு


அவிசாவளை அஸ்வத்த இரும்பு பாலத்தை பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க இன்று திறந்து வைப்பார். இதன் திறப்பு விழா இன்று மாலை நான்கு மணிக்கு இடம்பெறும்.

இந்தப் பாலம் அஸ்வத்த 178 மீற்றர் நீளமானதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது ஏழு தசம் மூன்று-மீற்றர் அகலமானதாகும். இதில் இரண்டு ஒழுங்கைகள் உள்ளன.

அஸ்வத்த – ரன்வெல கிராமங்களை இணைக்கும் வகையில் பிரிட்டனின் மாபே பிரிஜ் நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியோடு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்திய சிறுமிகள் பொது இடங்களில் நடமாடுவதற்கு அச்சம் கொண்டுள்ளதாக ஆய்வொன்றில் கண்டுபிடிப்பு


தாம் பொது இடங்களில் நடமாடுகையில் இம்சைப்படுத்தலுக்கு உள்ளாவது பற்றி இந்திய சிறுமிகள் மத்தியில் அச்சம் நிலவுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வை மகளிர் உரிமைகளுக்காக போராடும் சேவ் தெ சிலரன் அமைப்பு நடத்தியுள்ளது. சிறகுகள் 2018 - இந்திய சிறுமிகளின் உலகம் என்ற பெயரில் ஆய்வு தொகுக்கப்பட்டுள்ளது.

நகரமாக இருந்தால் என்ன, கிராமமாக இருந்தால் என்ன, தாம் குறுகலான ஒழுங்கைகளில் நடந்து செல்வதற்கு பெரிதும் அச்சம் கொண்டுள்ளதாக 33 சதவீதமான சிறுமிகள் தெரிவித்துள்ளனர்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி