Sri Lanka Brodcasting Corporation

Thu05282020

Last updateMon, 24 Feb 2020 8pm

உள்ளூர்

பொசொன் வாரம் இன்று ஆரம்பமாகிறது.

பொசொன் வாரம் இன்று ஆரம்பமானது. அனுராதபுரம் ஜயஸ்ரீ மஹா போதிக்கு அருகில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பிரித் பாராயண நிகழ்வு இன்றுமுதல் ஏழு நாட்களுக்கு இடம்பெறவிருக்கின்றன. பிரித் பாராயண நிகழ்வு 40ஆவது வருடமாகவும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 3 மணிக்கு பெரஹராவும் இடம்பெறவுள்ளது. 
 
மிஹிந்தலை, தந்திரிமலை ஆகிய இடங்களில் பூரண அரச அனுசரணையில் பொசொன் நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன. பொசொன் தினத்திற்கு அமைவாக, பொலன்னறுவை மாவட்டத்தில் மத வழிபாட்டு நிகழ்ச்சிகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன. பொலன்னறுவை வருடாந்த தான நிகழ்ச்சி ஜனாதிபதி தலைமையில் எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. 

வரவு - செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட ஓய்வூதியம் பெறுவோருக்கான கொடுப்பனவு அடுத்த மாதம் முதல்

 
 
 
 
புதிய சம்பளக் கொடுப்பனவை அடுத்த மாத ஓய்வூதியத்துடன் சேர்த்துக் கொள்ள முடியும் என்று ஓய்வூதியக் கொடுப்பனவு பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் தெரிவித்துள்ளார். 
 
2019ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்திற்கு அமைய, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான சுற்றுநிருபம் மாவட்ட பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் ஓய்வூதியம் பெறும் ஐந்து லட்சம் பேர் நன்மை அடைகிறார்கள். இரண்டு மாதங்களுக்குள் அதிகரிக்கப்பட்ட தொகையை வழங்குமாறு மாவட்ட பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது.  

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த 178 பேருக்கு இழப்பீடுகள்.

 
 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலில் உயிரிழந்த 178 பேரின் குடும்பத்தவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக இழப்பீடுகளுக்கான அலுவலகம் அறிவித்திருக்கிறது. 
 
இழப்பீடுகளின் பெறுமதி 18 கோடி ரூபாவை தாண்டுகிறது. காயமடைந்த 345 பேருக்கு நான்கு கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டிருக்கிறது. சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களுக்கு அமைய இழப்பீடுகள் வழங்கப்படுகின்றன. 
 
தெமட்டகொட குண்டுவெடிப்பில் உயிரிழந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளுக்காகவும் தலா பத்து லட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்புச் சம்பவங்களினால் சேதமடைந்த மூன்று தேவாலயங்களையும் மறுசீரமைக்கவென இரண்டு கோடி 50 லட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் அலுவலகம் கூறுகிறது.  

இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில்

கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு சங்-ரில்-லா, சின்னமன் கிரான்ட் மற்றும் கிங்ஸ்பெரி ஹோட்டல்களிலும் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் காயமடைந்தவர்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நீர்கொழும்பு – கட்டுவப்பிட்டிவ தேவாலயத்தில் காயமடைந்தவர்களும், நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு சியொல் தேவாலயத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய அரசியல் நிலையை அமைதியான முறையில் தீர்க்க ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கைகளை மஹா சங்கத்தினர் வரவேற்றுள்ளனர்.

தற்போதைய அரசியல் நிலையை அமைதியான முறையில் தீர்க்க ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கைகளை மஹா சங்கத்தினர் வரவேற்றுள்ளனர். நாடு அரசியல்வாதிகளுக்கு அன்றி, பொதுமக்களுக்கே சொந்தமானதாகும் என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கொடபொல அமரகீர்த்தி தேரர் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் தமக்காக வேலை செய்வதற்காக மக்கள் பிரதிநிதிகளாக அவர்களை சில காலம் நியமிக்கின்றனர். அந்தப் பணியை அவர்கள் உரிய முறையில் விளங்கிக் கொண்டு பொறுப்புடன் பொதுமக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினரின் செயற்பாடுகளை கருத்திற் கொண்டு அவரை நீக்க வேண்டிய ஜனாதிபதிக்கு ஏற்பட்டதாக இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கல்லேல்ல சுமனசிறி தெரிவித்தார்.

அர்ஜூன் மகேந்திரனை உடனடியாக கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


பிணைமுறி விநியோக மோசடியுடன் சம்பந்தப்பட்ட பிரதான சந்தேகநபரான அர்ஜூன் மகேந்திரனை உடனடியாக கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உண்மைக்கான குரல் அமைப்பு அரசாங்கத்திடம் கோரியுள்ளது. அந்த அமைப்பின் சட்டத்தரணி ஷாப்திக்க வெல்லப்பல்லி இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

உலகின் வௌ;வேறு இடங்களிலும் மறைந்து வாழ்ந்த எல்ரிரிஈ பயங்கரவாதிகளை கைது செய்த இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு அர்ஜூன் மகேந்திரனை கைது செய்வது பெரிய காரியம் அல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சகல தொகுதி, மாவட்ட அமைப்பாளர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள் - ஜனாதிபதியின் தலைமையில் விசேட சந்திப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். பொதுத் தேர்தல் தொடர்பாக ஆராய்வது இதன் நோக்கமாகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார். கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ள

இலங்கை வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த மாதம் இலங்கை வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஒன்றரை இலட்சத்தை தாண்டியுள்ளது.

கடந்த வருடத்தின் ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது அரை சதவீத வளர்ச்சியாகும் என சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் அறிவித்துள்ளது.

இம்முறை இந்தியா, சீனா, பிரிட்டன், ஜேர்மனி, அவுஸ்திரேலிய ஆகிய நாடுகளிலிருந்து ஆகக் கூடுதலான சுற்றுலா பயணிகள் வருகை தந்திருக்கிறார்கள்.

இந்தப் பயணிகள் மத்தியில் 25 சதவீதமானோர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி