Sri Lanka Brodcasting Corporation

Sat08242019

Last updateTue, 18 Jun 2019 3pm

உள்ளூர்

இலங்கை பயறு உற்பத்தியில் தன்நிறைவு கண்டுள்ளது.

இம்முறை சிறுபோகத்திற்கான நெல் அறுவடை கிடைத்ததைத் தொடர்;ந்து அடுத்த வருடம் பெப்ரவரி மாதம்வரை நாட்டுக்குத் தேவையான நெல் கையிருப்பில் காணப்படுவதாக விவசாயப் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ரொஹான் விஜயக்கோன் தெரிவித்துள்ளார். சிறுபோகத்திற்கான நெல் அறுவடை தற்சமயம் ஆரம்;பமாகியுள்ளது. 15 இலட்சத்து 8 ஆயிரம் மெற்றிக் தொன் நெல் அறுவடையை எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். 2015 – 2016 பெரும்போகத்தில் கிடைத்த அறுவடை 29 இலட்சத்து மெற்றிக் தொன்களாகும். இரண்டு போகங்களிலிருந்து கிடைக்கும் நெல்லை எதிர்வரும் பெப்ரவரி மாதம் வரை பயன்படுத்தலாம் என விவசாய பணிப்பாளர் நாயகம் கூறினார்.

ஏதிர்வரும் பெரும்போகத்தை இலக்காகக் கொண்டு பயிர் செய்கைத்திட்டம் அமுலாகிறது. பொரும்போகத்திற்கான நெற் பயிர் செய்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகின்றது, பெரும் போகத்தில் எட்டு இலட்சம் ஹெட்டயர் விஸ்தீரணமான நிலப்பரப்பில் நெல்லை பயிரிடுவது இலக்காகும். பயிர் செய்கையில் நாடு தன்னிறைவு கண்டிருக்கிறது. நாட்டின் தன்னிறைவுக்கு போதுமான பயறும் கிடைக்கிறது. இலங்கையின் வருடாந்த பயறுச் தேவை இரண்டாயிரத்து 600 மெற்றிக் தொன்களாகும். கடந்த காலங்களில் உள்நாட்டிலேயே பயறு உற்பத்தி செய்யப்பட்டமையினால், 87 கோடி ரூபாவை சேமிக்க முடிந்ததாகவும் அவர் கூறினார். எதிர்வரும் பெரும்போகத்தில் 80 ஆயிரதம் ஹெட்டயர் விஸ்தீரணமான நிலப்பரப்பில் சோளம் பயிரிடப்படும் என்றும் விவாய பணிப்பாளர் நாயகம் கூறினார். 

நாட்டின் இறைமையை வெளிநாட்டவர்களுக்கு காட்டிக் கொடுக்க அரசாங்கம் தயாரில்லை என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் இறைமை வெளிநாட்டவர்களுக்கு காட்டிக் கொடுக்கப்பட மாட்டாதென அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் துறைமுக நகரின் காணியை சீனாவிடம் ஒப்படைக்க திட்டமிட்டிருந்தது. ஆனால் நல்லாட்சி அரசாங்கம் இந்த நிலையை மாற்றியமைத்து, உரிய காணியை 99 வருடங்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இன்று காலை இடம்பெற்ற சுபாரதி நிகழ்ச்சியில் அவர் கருத்து வெளியிட்டார். போலி புரட்சிவாதிகளினால், நாட்டுக்கு கடந்த காலங்களில் பாதகங்கள் ஏற்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். அனைத்தையும் எதிர்ப்பது இவர்களின் கொள்கையாகும். நாட்டின் எதிர்கால பயணம் இதன் மூலம் ஸ்தம்பிதம் அடையும் என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டினார். 

ஆட்பதிவுத் திணைக்களம் அடுத்த மாத நடுப்பகுதியில் பத்தரமுல்லைக்கு மாற்றப்படவுள்ளது.- குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தின் செயற்பாடுகளும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பத்திரமுல்லைக்கு மாற்றப்படுகிறது.

ஆட்பதிவுத் திணைக்களம் அடுத்த மாதம் நடுப்பகுதியில் பத்தரமுல்லை சுகுபாய கட்டடத் தொகுதிக்கு எடுத்துச் செல்லப்படவிருக்கிறது. இதனால் இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் ஆள் அடைய அட்டையைப் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்களை துரிதமாக அனுப்ப வேண்டுமென ஆட்பதிவு ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத்குமார தெரிவித்துள்ளார். இதுவரை ஒரு இலட்சத்து 50 ஆயிரம் மாணவர்களின் விண்ணப்பங்கள் திணைக்கழகத்திற்கு இதுவரை கிடைக்கவில்லைர என்றும் அவர் கூறினார். எதிர்வரும் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி 16வயதை பூர்த்தி செய்த சகல மாணவர்களுக்கும் இதற்காக விண்ணபிக்கலாம்.

இதேவேளை புஞ்சிபொரளை, ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களம் எதிர்வரும் திங்கட்கிழமை பத்தரமுல்ல, சுஹூருபாய கட்டடத் தொகுதிக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. மக்களுக்கு விரிவான சேவையை வழங்குவது இதன் நோக்கமாகும்.

இரட்டை பிரஜாவுரிமை 15 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக குடியரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் கூறினார். தற்சமயம் விண்ணப்பித்துள்ள எண்ணாயிரம் பேருக்கு இவ்வருட இறுதிக்குள் இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படவுள்ளது. இரட்டை பிரஜாவுரிமையை பெற்றுக் கொள்வதற்கென மாதாந்தம் ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

முப்படையினரின் பாதுகாப்பையும் கௌரவத்தையும் பேண திடசங்கற்பம் - ஜனாதிபதி உறுதி

முப்படை அங்கத்தவர்களது பாதுகாப்பையும், கௌரவத்தையும் பேணிக்காக்க அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

Read more...

சிறுபோக அறுவடை நெல் கொள்வனவு ஆரம்பம்

சிறுபோக அறுவடை நெல்லை விலைகொடுத்து வாங்கும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வைபவம் கல்கமுவ தொகுதியில் உள்ள கிரிபாவ-வராவௌ பிரதேசத்தில் அமைச்சர் பீ.ஹரிசன் தலைமையில் நேற்று இடம்பெற்றது.

Read more...

இந்திய மீனவர் தொடர்பான பிரச்சினைகள் பற்றிப் பேச வடபகுதி பிரதிநிதிகள் அடங்கிய குழு

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் எழுந்துள்ள பிரச்சினைகள் பற்றி ஆராய வடக்கின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று இந்தியாவிற்கு அனுப்பப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

Read more...

28 கோடி ரூபா செலவில் காரைநகரில் மீன்பிடி படகு கட்டுமாண தொழிற்சாலை

வடபகுதி மீனவர்களின் பொருளாதார அபிவிருத்தி கருதி அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கடற்றொழில் நீரியியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Read more...

தொகுதி அமைப்பாளர் பதவிகளின் மறுசீரமைப்பின் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை வலுவூட்ட நடவடிக்கை

தொகுதி அமைப்பாளர் பதவியை மறுசீரமைப்பதின் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை வலுப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

Read more...

அவன்கார்ட் ஆயுத கப்பலின் கெப்டன் மீண்டும் விளக்கமறியலில்

அவன்கார்ட் ஆயுத கப்பலின் கேப்டன் மீண்டும் செப்டெம்பர் முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு;ள்ளார். இன்று காலை 11 மணியளவில் காலி பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Read more...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒழுங்கு படுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒழுங்குபடுத்தும் காலம் உருவாகியிருப்பதாக கொழும்பு மாவட்ட அமைப்பாளர் ரஜித்த கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். கட்சியின்  தலைமைத்துவத்திற்கு சவால்விடுக்கும் வகையில் கட்சி அலுவலகம் முன்பாக கூக்குரலிட்டவர்கள் தொடர்பில் சரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படாததால் கட்சி உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Read more...

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி