Sri Lanka Brodcasting Corporation

Thu05282020

Last updateMon, 24 Feb 2020 8pm

உள்ளூர்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் இன்று இடம்பெறவிருந்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது.

புதிய கூட்டணியை ஒன்றை கட்டியெழுப்புவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் இடம்பெறவிருந்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறுமென தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை வரலாற்றில் முதன்முதலாக செய்மதி ஒன்று விண்வெளிக்கு

இலங்கையின் சரித்திரத்தில் முதன்முதலாக செய்மதி ஒன்று இன்று விண்வெளிக்கு ஏவப்படுகிறது.

ராவணா-ழுநெ எனப் பெயரிடப்பட்ட இந்த செய்மதி இன்று இலங்கை நேரப்படி பிற்பகல் மூன்று மணியளவில் விண்வெளிக்கு அனுப்பப்படும் என்று ஆர்தர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.

இந்த செய்மதி விண்வெளியில் பூமியை சுற்றி வரும் ஒழுக்கில் சேர்க்கப்படும். முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் 18ம் திகதி ராவணா - ஒன்று என்ற செய்மதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஏவப்பட்டது.

இன்றைய தினம் அந்த நிலையத்திலிருந்து இந்த செய்மதி ஓடம் 'ஒழுங்கிற்குசேர்க்கப்படும். இந்த நிகழ்வு தொடர்பான நேரலைகளை இலங்கைவாழ் மக்கள் பார்வையிடுவதற்கு தேவையான ஏற்பாடுகளை ஆர்தர் சி கிளார்க் மையம் செய்துள்ளது.

இந்த நேரடி ஒளிபரப்புஇலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.30இல் இருந்து மொரட்டுவ - கட்டுபெத்த ஆர்தர் சி கிளார்க் மையத்தில் மேற்கொள்ளப்படும்.

1990 சுவசரிய என்ற இலவச அம்பியுலன்ஸ் சேவை விரைவில் கிழக்கு மாகாணத்தில் அறிமுகம்.

1990 சுவசரிய என்ற இலவச அம்பியுலன்ஸ் சேவை விரைவில் கிழக்கு மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்படுமென்று இதன் தலைமை நிறைவேற்று அதிகாரி ரொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார். இதனுடன்இந்தச் சேவை நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாகாணங்களுக்கும் விஸ்தரிக்கும் திட்டம் பூரணமடைவதாக அவர் குறிப்பிட்டார். 2016ம் ஆண்டு ஜுலை மாதம் 27ம் திகதி இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அம்பியுலன்ஸ் சேவையின் மூலம் பொதுமக்களுக்குப் பெரும் நன்மைகள் கிடைக்கின்றன. இந்தச் சேவையினால் இதுவரையில் நன்மையடைந்த நோயாளர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்திற்கும் அதிகமாகும் என அவர் குறிப்பிட்டார்.  இதன் மூலம் நாளொன்றுக்கு 790 பேருக்கும் அதிகமானவர்கள் பயன்பெறுகின்றனர். 1990 என்ற அவசர அழைப்பு இலக்கத்தை அழைப்பதன் ஊடாக இந்தச் சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆசிரியர் தொழிலை வேறு எந்தத் தொழிலுடனும் ஒப்பிட முடியாது என கல்வி அமைச்சர் வலியுறுத்தல்.

ஆசிரியர் தொழில் உலகில் மிகவும் மகத்துவமான ஒரு தொழிலாக கருதப்படுவதால்அதனை வேறு எந்தவொரு தொழிலுடனும் ஒப்பிட முடியாது என்று கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

குளியாப்பிட்டிய நகரில் அமைந்துள்ள சுரதுத மகா வித்தியாலத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இவ்வாறு குறிப்பிட்டார்;.

இந்தக் கட்டடம் 60 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டது.

'அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலைஎன்ற திட்டத்தின் கீழ் இந்த வகுப்பறை கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பொசொன் பண்டிகையை முன்னிட்டு. நாடுமுழுவதும் பௌத்த விஹாரைகளில் சமய வழிபாடுகள்.

 

பொசொன் நோன்மதி தின விஷேட நிகழ்வுகள் நேற்று நாடளாவிய ரீதியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றன. நாடளாவிய ரீதியிலுள்ள பௌத்த வணக்கஸ்தலங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பௌத்தக் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருக்கின்றன.

அனுராதபுரத்தில் ஜயஸ்ரீ மஹாபோதிஅட்டமஸ்தான புனித ஸ்தலங்களில் பொசோன் பௌத்த மத அனுஷ்டானங்கள் இடம்பெற்று வருகின்றன. அத்துடன் றுவன்வெலி-ஷாயமிஹிந்தலைதந்திரிமலைசோமாவதிசேருவாவிலண்டி ஸ்ரீ தலதா மாளிகைமஹியங்கனைமுதியன்கனையகளனி மற்றும் களுத்துறை பல்வேறு பௌத்த மத நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இலட்சக்கணக்கான பௌத்த மக்கள் இந்த புனித ஸ்தலங்களில் சில் அனுஷ்டானங்களில் ஈடுபட்டனர். 

இதேவேளைபல பௌத்த மத நிகழ்வுகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றதாக புத்தசாசன அமைச்சு தெரிவிக்கிறது. பொலன்னறுவவரலாற்றுச் சரித்திர புகழ்மிக்க கல்-விஹாரையில் இடம்பெற்ற சமய அனுஷ்டானங்களை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் சிங்கள சேவை நேரடியாக அஞ்சல் செய்தது. அங்கு இடம்பெறவுள்ள இரவு பிரித் பாராயண நிகழ்வும் நேரடியாக இரவு 9.30லிருந்துஅதிகாலை 4.15 வரை அஞ்சல் செய்யப்பட்டது 

பொலன்னறுவை ரஜமஹா விஹாரையின் பெரஹரா மற்றும் பொசொன் பெரஹரா என்பன நாளை இடம்பெறும். பொலன்னறுவை பௌத்த சங்கம் ஏற்பாடு செய்துள்ள வருடாந்த பொசொன் அன்னதானம் வழங்கும் நிகழ்வு பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்திற்கு அருகாமையில் இடம்பெறும். அத்துடன்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மொஹமட் மில்ஹான் உட்பட ஐந்து சந்தேகநபர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்கள்.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் டுபாயில் கைது செய்யப்பட்ட மேலும் ஐந்து சந்தேகநபர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்கள். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பயங்கரவாத குழுவின் முக்கியஸ்தரான மொஹமட் மில்ஹானும் இதில் அடங்குகிறார். மில்ஹான் உட்பட சந்தேகநபர்கள் இலங்கை குற்றப்புலனாய்வு அதிகாரிகளின் கண்காணிப்பில் இருப்பதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

பௌத்த தேரர்களுக்கான காப்புறுதித் திட்டம் எதிர்வரும் 26ஆம் திகதி அமுலுக்கு வருகிறது.

புத்தசாசன அமைச்சு நடைமுறைப்படுத்தும் பௌத்த புத்திரர்கள் என்ற காப்புறுதித் திட்டம் எதிர்வரும் 26ஆம் திகதி அமுலுக்கு வரவிருக்கிறது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். இலங்கையில் உள்ள 40 ஆயிரம் பௌத்த பிக்குகளில் அரச வருமானம் பெறும் பௌத்த பிக்குகள், கல்வி அமைச்சின் காப்புறுதித் திட்டத்தை பெற்றுவரும் பிரிவெனாக்கள் ஆகிய தரப்புக்களைத் தவிர, ஏனைய பிக்குமாருக்கு இதற்கான வசதி கிடைக்கும். திறைசேரி இதற்கென ஐந்து கோடி ரூபாவை ஒதுக்கியிருக்கிறது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூரின் உயர்மட்ட அமைச்சர்களை சந்தித்து பேசியுள்ளார்.

இந்து சமுத்திரத்தை மோல்கள் அற்ற வலயமாக மாற்றுவதற்கு இலங்கை மேற்கொண்டுவரும் முயற்சிகளை பாராட்டுவதாக சிங்கப்பூர் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கே.சண்முகம் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரின் ஒத்துழைப்பு இதற்கு முழுமையாக கிடைக்கும் என அவர் கூறினார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் கருத்து வெளியிட்டார்.

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனையும் பிரதமர் சந்தித்துள்ளார். இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் பற்றியும் இதன் போது கலந்துரையாடப்பட்டது. பூகோள பயங்கரவாதத்தை ஒடுக்குவது பற்றியும் இதன் போது ஆராயப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான குற்றப்பத்திரத்தை ஒரு மாத்திற்குள் தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் சட்டமா அதிபரிடம் கோரிக்கை.

நீதிமன்ற அவதூறு குற்றச்சாட்டின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டாவது முறைப்பாட்டுடன் தொடர்புடைய குற்றப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டிருக்கின்றது. 
 
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, விஜித் மலல்கொட, மூர்து பெர்னாண்டோ ஆகிய மூன்று நீதியரசர்கள் முன்னிலையில் வழக்கு இன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. குற்றப் பத்திரத்தை ஒரு மாத்திற்குள் தாக்கல் செய்வது அவசியமாகும். பாராளுமன்றத்தை கடந்த நவம்பர் மாதத்தில் கலைப்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி, தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கை விசாரித்த நீதிபதிகள் பற்றி ரஞ்சன் இராமநாயக்க வெளியிட்ட கருத்தைத் தொடர்ந்து அவருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.  

தங்கிவாழும் மனோநிலையில் இருந்து மக்களை மீட்டெடுப்பது சமுர்த்தி வேலைத்திட்டத்தின் நோக்கம்

தங்கிவாழும் மனோநிலையிலிருந்து மக்களை விடுவிப்பது சமுர்த்தி வேலைத்திட்டத்தின் இலக்காகும் என்று அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். புதிதாக சிந்திப்போம் - வல்லமையுடன் எழுந்திருப்போம் என்ற வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது. 
 
ஜனசவிய, சமுர்த்தி போன்ற நிவாரணங்களை அன்று முதல் இன்று வரை பெற்றுக் கொள்ளும் ஒரே தரப்பு இருந்து வருவதாகவும், இதனால் அவர்களை வலுவூட்ட முடியாத நிலை காணப்படுவதாகவும் அமைச்சர் கூறினார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இன்று காலை இடம்பெற்ற சுபாரதி நிகழ்ச்சில் அவர் கருத்து வெளியிட்டார். 
 
இவர்களை வழிநடத்தும் வேலைத்திட்டமும் காணப்படுகிறது. இதனைக் கருத்திற் கொண்டு சமுர்த்தி பெறுவோரின் மனோநிலையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக அவர்களை சுயதொழிலில் ஈடுபடுத்தும் வேலைத்திட்டமும் அமுலாகிறது. தற்சமயம் ஆறு லட்சம் பேர் சமுர்த்தி மானியம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி