Sri Lanka Brodcasting Corporation

Thu05282020

Last updateMon, 24 Feb 2020 8pm

உள்ளூர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று மீண்டும் கூடுகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று மாலை மீண்டும் கூடுகிறது. குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது. காத்தான்குடி பொலிஸ் நிலைய முன்னாள் பிரதான நிலைய பொறுப்பதிகாரி மற்றும் காத்தான்குடி சுபி முலிம் குழுவின் பிரதிநிதிகள் இன்று தெரிவுக் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பானவர்களை வெளிப்படுத்துவது மற்றும் இவ்வாறான தாக்குதல்கள் எதிர்வரும் காலங்களில் இடம்பெறுவதை தவிர்ப்பதற்குத் தேவையான நடவடிக்;கைகளை மேற்கொள்வது இந்தத் தெரிவுக் குழுவின் பொறுப்பாகும். அமைச்சர் ராஜித்த சேனாரட்ன, ரவி கருணாநாயக்க மற்றும் முன்னாள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர்களான ஜயம்பத்தி விக்ரமரட்ன, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் நளின் டி ஜயதிஸ்ஸ ஆகியோரும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். 

 

தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்ப அரசாங்கத்தின் முக்கிய பங்கு அவசியம்

தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முக்கிய பங்கு வகிக்க வேண்டுமென சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன தெரிவித்துள்ளார். இதற்காக சிவில் அமைப்புக்களும் பங்களிப்பு செய்ய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சுபாரதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார். 

 

பொதுமக்களை பாதிப்பிற்கு உள்ளாக்கும் அரச அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை

குறுகிய அரசியல் நோக்கத்திற்காக பொதுமக்களை பாதிப்புக்கு உள்ளாக்கும் அரச அதிகாரிகள் இன்னும் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆரச்சி தெரிவித்துள்ளார். 
 
பொதுமக்களிடமிருந்து இது தொடர்பான முறைப்பாடுகள் தொடர்ச்சியாக கிடைக்கப் பெற்றுவருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறான அதிகாரிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார். அங்குனுகொல பெலஸ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

 

ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவை கூடியது. அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது. அமைச்சரவை கூட்டம் கடந்த வாரம் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இலங்கையினால் தயாரிக்கப்பட்ட ராவணா வன் செய்மதி விண் ஒழுக்கில் சேர்ப்பு.

ராவணா வன் என்ற செய்மதியை விண் ஒழுக்கில் நிலைப்படுத்தியமை இலங்கைக்குக் கிடைத்த பாரிய வெற்றியாகுமென அமைச்சர் சுஜீவ சேனசிங்ஹ தெரிவித்துள்ளார். இந்த தயாரிப்புடன் தொடர்புடைய இரண்டு மாணவர்களினதும் எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான ஆதரவை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். செய்மதி விண் ஒழுக்கில் செலுத்தப்பட்டதை நேரடியாகக் காண்பதற்கு ஆதர் சி கிளார்க் மத்திய நிலையத்திற்கு சென்ற அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். விஞ்ஞானம்தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்கள் விடயத்தில் இலங்கை 88வது இடத்தில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஆதர் சி கிளார்க் மத்திய நிலையத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரியும்பணிப்பாளர் நாயகமுமான சனத் பனாவன்ன இது தொடர்பான தெளிவுகளை வழங்கினார். ராவணா வன் செய்மதியை மின் மற்றும் இலத்திரனியல் துறை பொறியியலாளர்களான தரிந்து தயாரத்னவும்துலானி சாமிகாவும் தயாரித்துள்ளனர்.

சுகாதார அமைச்சரின் செயற்பாடுகளுக்கு தொழிற்சங்கங்கள் பாராட்டு.

தற்போதைய சுகாதார அமைச்சர் நாட்டிற்கு பாரிய சேவையை ஆற்றியிருப்பதாக சுகாதாரத்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் பல தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இந்தச் சங்கங்கள் இன்று ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தி இது தொடர்பாக தெளிவுபடுத்தியிருந்தன. கடந்த 3வருடங்களில் அரச வைத்தியசாலைகளில் மாத்திரம் 1இலட்சத்து 21 ஆயிரத்திற்கு மேற்பட்ட கண் வில்லை பொருத்தும் சிகிச்சை இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என அங்கு கருத்து வெளியிட்ட சமன் ரத்னபிரிய தெரிவித்தார். புகையிலை மற்றும் புகைப்பிடித்தல் பாவனையைக் கட்டுப்படுத்தல் தொடர்பான புகைப்பட எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இருதய சிகிச்சைக்கான ஸ்ரென்சும் வழங்கப்படுகின்றன. புற்றுநோயாளர்களுக்கு தொடர்ந்தும் மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அரச வைத்திய உத்தியோகத்தர்கள் சங்கம் அமைச்சருக்கு எதிராக முன்னெடுத்து வரும் எதிர் பிரச்சாரங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த ஊடக சந்திப்பு இடம்பெற்றது. இடைக்கால வைத்திய சபையின் தொழிற்சங்க குழு தலைவர் ரவி குமுதேஷும் அங்கு கருத்து வெளியிட்டாh

 

அதிக செலவை ஏற்படுத்தும் மின் உற்பத்தி பயன்பாட்டை ஒன்றரை வருடத்தில் முடிவுறுத்த நடவடிக்கை - துறைசார் அமைச்சர்

அதிக செலவை ஏற்படுத்தும் மின்னுற்பத்தி நிலையங்கள் ஒன்றரை வருடத்தில் முழுமையாக நிறுத்தப்படுமென அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அதேபோல்மேலும் சில மாதங்களில் இலங்கை மின்சார சபை வெளிநாடுகளிலும் ஒப்பந்த அடிப்படையில் வேலைகளை ஆரம்பிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டார். மின்சார சபை இலாபமடைய வேண்டுமானால் உலகை வெற்றி கொள்ள வேண்டும். இதற்குத் தேவையான தொழில்நுட்ப அறிவு மின்சார சபையிடம் இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எப்போதும் பாவனையாளர்களுக்கு முக்கியத்துவம் அளித்துச் செயற்பட இலங்கை மின்சார சபை மாற்றம் காண வேண்டும். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். வெசாக் மற்றும் பொசொன் பண்டிகைக் காலத்தில் நாடு இருளில் இருப்பதைக் காண்பதில் மகிழ்ச்சியடைய முயற்சித்த எதிரணிகளின் கனவை சீர்குலைக்க அரசாங்கத்தால் முடிந்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். சீஈபி கெயார் கையடக்க தொலைபேசி செயலிஅங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் மின்பாவனையாளர்களுக்கு பல வசதிகள் கிடைக்க உள்ளன. கையடக்கத் தொலைபேசி மூலம் இதனை தரவிறக்கம் செய்து பதிவு செய்து கொள்வதன் மூலம் இந்த பயன்களைப் பெற முடியும்.

நாட்டிற்கு பொதுவான சட்டமும் கல்விக் கொள்கையும் அவசியம் - அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க

நாட்டிற்கு பொதுவான சட்டமும் பொதுவான கல்விக் கொள்கையும் அவசியம் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இதற்கு அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவு அவசியமாகும். அனைத்து இலங்கையர்களும் நாட்டிற்குப் பொருத்தமான வகையில் வாழ வேண்டும். அதேபோல் எதிர்கால சந்ததிக்கு பொருத்தமான வாழ்க்கைச் சூழலை இப்போதிருந்தே உருவாக்க வேண்டும். குருநாகல் நகர மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய வழிகாட்டல் நிகழ்ச்சியில் இன்று பிற்பகல் கலந்து கொண்டு அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு முன்னர் பல்வேறு பிரதேசங்களில் சிற் சில பயங்கரவாதச் செயற்பாடுகள் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டார். எனினும்இது தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய தரப்புக்கள் உரிய முறையில் கவனம் செலுத்தவில்லை என அவர் கூறினார். நாட்டின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு கூடுதலான பங்களிப்பை வெளிநாட்டவர்களே வழங்கியிருப்பதாக குறிப்பிட்ட அவர்பெருந்தொகையான பணம் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப் பெற்றிருப்பதாக சுட்டிக்காட்டினார். அனைத்து இன மக்களும் நாட்டில் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழல் உருவாக வேண்டுமென்றும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வலியுறுத்தினார்.

பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தின் போதைப் பொருட்களுடன் 51 பேர் கைது.

 

பலாங்கொடை  பெலிஹூல்ஓயா பிரதேசத்தில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் சட்டவிரோத போதைப் பொருளுடன் 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட படையணி மற்றும் மதுவரி திணைக்கள அதிகாரிகள் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். பேஸ்புக் மூலம் இந்த விருந்துபாரசம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்;களிடம் இருந்து ஒரு தொகை சட்டவிரோதமான போதைப்பொருள் பொலிசாரினால் மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைக்காக இரத்தினபுரி மதுவரி திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் மத ஒற்றுமையை கட்டியெழுப்ப அரசாங்கமும், எதிர்க்கட்சியும் கண்டிப்பாக ஒத்துழைப்புடன் செயற்படவேண்டும் - சபாநாயகர்

நாட்டில் மத ஒற்றுமையை கட்டியெழுப்ப அரசாங்கமும்எதிர்க்கட்சியும் கண்டிப்பாக ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டியது அவசியமென சபாநாயகர்  கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை தீர்ப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட சகல நடவடிக்கைகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டஎதிர்க்கட்சியினர் வழங்கிய ஒத்துழைப்பையும் சபாநாயகர் பாராட்டியுள்ளார். குருநாகலில் இன்று இடம்பெற்ற இலங்கையில் இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கம் தொடர்பில் பாராளுமன்ற விசேட செயற்குழுவின் நான்காவது பிரதேச செயலமர்வு இடம்பெற்றது.. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போது சபாநாயகர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இந்த நிகழ்வில் கலந்து கருத்து தெரிவிக்கும்போது அரசாங்கத்தின் சகல நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பைத் தெரிவிப்பது எதிர்க்கட்சியின் செயற்பாடாகாது என குறிப்பிட்டார். பொதுமக்களின் நலனுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளுக்கும் எதிர்க்கட்சி ஒத்துழைப்பு வழங்குமென அவர் குறிப்பிட்டார். பிரிவினைவாத செயற்பாடுகளை தடுப்பதற்குஒன்றிணைந்த வேலைத்திட்டம் அவசியமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

 

 

 
 

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி