Sri Lanka Brodcasting Corporation

Thu05282020

Last updateMon, 24 Feb 2020 8pm

உள்ளூர்

நாட்டில் அறிவார்ந்த ஊடகக் கலாசாரம் கட்டியெழுப்பப்படும் என புதிய ஊடக அமைச்சர் உறுதி அளித்துள்ளார்

நாட்டில் அறிவார்ந்த ஊடகக் கலாசாரம் கட்டியெழுப்பப்படும் என தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், உயர்கல்வி, தொழில்நுட்ப புத்தாக்க மற்றும் ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று முற்பகல் ஊடக அமைச்சில் தனது கடமைகளை ஆரம்பித்த அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சகல இனங்களுக்கும், ஆத்மார்த்தமாக வாழ்வதற்கான உரிமை நாட்டில் கட்டியெழுப்புவதற்கான ஊடகக் கலாசாரத்தை நாட்டிற்கு தற்போதைய அரசாங்கம் அறிமுகப்படுத்தும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஊடக சுதந்திரம் உயர்ந்தபட்சம் பாதுகாக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கையை முன்பை போன்று சிறந்த வேலைத்தளமாக மாற்ற அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என பிரதமர் வலியுறுத்தல்

ஐந்து வருடங்களுக்கு முன்னர் சிறந்த வேலைத்தளமாக காணப்பட்ட இலங்கையை மீண்டும் அதே நிலைக்கு எடுத்துச் செல்ல அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதற்காக ஜனாதிபதி உட்பட அரசியல்வாதிகள், அரச ஊழியர்களுக்கு உயர்ந்தபட்ச வசதிகளை வழங்கும் என்றும் பிரதமர் கூறினார்.

நிதி மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சராக கடமைகளை ஏற்றுக்கொண்டதன் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றினார். 2005ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆட்சியிலிருந்து அரசாங்கத்தின் பொருளாதார ரீதியான வெற்றிகளை பிரதமர் நினைவு கூர்ந்தார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகத்தை ஆறு தசம் ஐந்து சதவீதத்தினால் பேண முடிந்தது. இந்தக் காலப்பகுதியில் 24 பில்லியன் டொலர்களாக காணப்பட்ட மொத்த தேசிய உற்பத்தி 2014ஆம் ஆண்டளவில் 79 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்தது.

இரண்டு பில்லியன் டொலர்களாக காணப்பட்ட வெளிநாட்டு ஒதுக்கம் 7 தசம் இரண்டு டொலர்கள் வரை அதிகரித்தது. ஒரு டொலரின் பெறுமதி 130 ரூபாவாக காணப்பட்டது. இந்தக் காலப்பகுதியில் வாழ்க்கைச் செலவு குறைந்த மட்டத்தில் காணப்பட்டது. 2005ஆம் ஆண்டில் காணப்பட்ட 91 சதவீதமான கடன்சுமை 2014ஆம் ஆண்டில் 71 சதவீதம் வரை குறைக்கப்பட்டதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

2015ஆம் ஆண்டின் பின்னர் நாட்டின் நிதிக் கட்டமைப்பு பலமிழக்க ஆரம்பித்தது. பணவீக்கம் அதிகரித்தமையினால் நாட்டின் கடன்தொகை கடந்த நான்கு ஆண்டுகளில் ஆயிரத்து 760 பில்லியன் ரூபாவாக அதிகரித்தது. நாணயத்தின் பெறுமதியும் இந்தக் காலப்பகுதியில் வீழ்ச்சி கண்டது.

அரச அதிகாரிகளுக்கு எப்.சி.ஐ.டி முன்னிலையில் ஆஜராக வேண்டிய நிலை ஏற்பட்டது. மத்திய வங்கியில் இடம்பெற்ற கொள்ளை நாட்டின் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியது. வியாபாரிகளை முதலீடுகளில் ஈடுபடுத்த செய்வதற்கான நிலை ஏற்படுத்துவது அவசியமாகும் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

நாட்டில் சட்டம், ஒழுங்கைப் பாதுகாத்து, சகல பிரஜைகளும்; இன, மத பேதங்களுக்கு அப்பால் கௌரவமாக வாழக்கூடிய சூழல் ஏற்படுத்தப்படும் என்று பாதுகாப்புச் செயலாளர் தெரிவிப்பு

ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக, இராணுவத்தை ஈடுபடுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பு மேலும் உறுதிப்படுத்தப்படும் என்று பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.  இராணுவ ஆட்சியை நாட்டில் முன்னெடுக்க எந்தவொரு அபிப்பிராயமும் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். மிஹிந்தலை புனித பூமிக்கு நேற்றுச் சென்ற பாதுகாப்புச் செயலாளர், விஹாராதிபதி சங்கைக்குரிய வலவா ஹெங்குன வௌ; தம்மரத்ன தேரரைச் சந்தித்தார். அதன் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். நாட்டில் இராணுவ நிர்வாகத்தை ஏற்படுத்துவதாக மக்கள் மத்தியில் அவசியமற்ற பீதியை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். அவ்வாறு எதுவும் இடம்பெறாது என பாதுகாப்புச் செயலாளர் என்ற வகையில் தான் பொறுப்புடன் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார். நாட்டில் சட்டம், ஒழுங்கைப் பாதுகாத்து, சகல பிரஜைகளும்; இன, மத பேதங்களுக்கு அப்பால் கௌரவமாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்தப் போவதாக அவர் குறிப்பிட்டார். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பொலிசாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார். போதைப்பொருள் வர்த்தகத்தை முடக்குவதற்குத் தேவையான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்காக சகலரினதும் ஒத்துழைப்பும் அவசியம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவிற்கும், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட பேச்சுவார்த்தை பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. இதன்போது போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்தல், பொதுமக்களைத் தெளிவூட்டல், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்டெடுத்தல் தொடர்பில் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பிரதமராக பதவியேற்கின்றார்

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பிற்பகல் 1.00 மணிக்கு பிரதம மந்திரியாக பதவியேற்க உள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் பிரதமராகப் பதவியேற்பார். அதனைத் தொடர்ந்து பிற்பகல் 3.00 மணிக்கு பிரதமர் அலுவலகத்தில் திரு.மஹிந்த ராஜபக்ஷ தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்க உள்ளார். நாளை பிற்பகல் அல்லது வெள்ளிக்கிழமை முற்பகல் புதிய அமைச்சரவையும் பதவியேற்க உள்ளது.

இதேவேளை, பாராளுமன்றத்தின் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று காலை நடைபெறும். இன்று காலை 11.00 மணிக்கு கட்சித் தலைவர்கள் சந்திப்பை கூட்டுமாறு சபாநாயகரினால் பாராளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக்கவுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பாராளுமன்றத்தினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் தனிப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கையை இரண்டாயிரத்து 500 முதல் 250 வரை குறைக்கத் தீர்மானம்

ஜனாதிபதியின் தனிப்பட்ட பணியாளர்களை இரண்டாயிரத்து 500 இலிருந்து 250 வரை குறைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியுடன் பயணிக்கும் வாகன தொடரணியின் எண்ணிக்கையையும் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜனாதிபதியுடன் 15 முதல் 20 வாகனங்கள் பயணிக்கின்றன. ஜனாதிபதி பயணிக்கும் போது எதிர்காலத்தில் பாதைகளும் மூடப்படக் கூடாதென ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

புதிய ஜனாதிபதி முன்னிலையில் பல சவால்கள் காணப்படுவதாக புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரச நிர்வாகத்தை மறுசீரமைப்பதே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் முன்னிலையில் உள்ள பிரதான சவால் என கலாநிதி ஷமில லியனகே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இலக்குகளையும் வேலைத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்த நிர்வாகம் மட்டத்தில் புதியவர்கள் அமர்த்த வேண்டும் என அவர் கூறினார். மக்களைப் பாதுகாப்பது அரச தலைவரின் பிரதான பொறுப்பாகும். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் போன்ற சம்பவங்களின் பின்னர்  மக்கள் மீதான பொறுப்புக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பது பற்றி கவனம் செலுத்த வேண்டும் என கலாநிதி லியனகே சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த சில வருடங்களாக நிலவிய பேரளவிலான ஜனநாயகம்புதிய ஜனாதிபதியின் தெரிவின் மூலம் யாதார்த்த நிலையை அடையும் என அவர் கூறினார்.

இதேவேளைகடந்த சில வருடங்களாக அபாயத்தை எதிர்கொண்டு தேசிய பாதுகாப்புபொருளாதாரம்சமூக மற்றும் கலாசாரத் தொடர்புகளை யாதார்த்த நிலைக்குக் கொண்டு வருவதே புதிய ஜனாதிபதியின் முன்னுள்ள சவால்கள் என சட்டத்தரணி மனோஜ் கமகே குறிப்பிட்டுள்ளார். இதற்காக அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்தின் ஒத்துழைப்பு ஜனாதிபதிக்கு அவசியமாகும்.

இதனை அடைய பொதுத் தேர்தலை நடத்துவதற்கான ஒத்துழைப்புக்களை தற்போதைய அரசாங்கம் ஜனாதிபதிக்கு வழங்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடு;த்தார். நாட்டில் சகல மக்களினதும் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பொதுத் தேர்தல் இடம்பெறும் வரை, காபந்து அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை.

அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இன்றைய தினம் பெரும்பாலும் காபந்து அரசாங்கம் அமைப்பதற்கு இடமிருப்பதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படிபிரதமர் ரணில் விக்ரமசிங்க தமது பதவியில் இருந்து விலகுவார் என தெரிவிக்கப்படுகிறது. 15 அமைச்சர்களைக் கொண்டதாக அமைச்சரவைக் கொண்டதாக இந்த காபந்து அரசாங்கம் அமைய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பொதுத் தேர்தல் இடம்பெற்று புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரையில் இந்த இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தமது முதலாவது அரச முறைப் பயணமாக இந்தியா செல்கிறார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷதனது முதல் அரச முறைப் பயணமாக எதிர்வரும் 29ஆம் திகதி இந்தியாவுக்கு பயணமாகவுள்ளார்.

புதுடில்லி செல்லும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்தித்துப் பேச்சு நடத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நேற்று புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைச் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்புச் செய்தியைத் தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சர்ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அரச முறைப் பயணமாக இந்தியா வருகை தருமாறு அழைப்பு விடுத்தமை குறிப்பிடத்தக்கது.               

 

ஜனாதிபதி இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்கின்றார்.

ஜனாதிபதிகோட்டாபயராஜபக்ஷஇன்றுமுற்பகல்10.30ற்குஜனாதிபதிசெயலகத்தில்தமதுகடமைகளைப்பொறுப்பேற்கின்றார். இலங்கையின்7ஆவதுநிறைவேற்றுஅதிகாரம்கொண்டஜனாதிபதியாகஅவர்நேற்றுசத்தியப்பிரமாணம்செய்துகொண்டார்.

இதனிடையே, ஜனாதிபதியின்செயலாளர்P.டீ.ஜயசுந்தரஇன்றையதினம்நியமிக்கப்படவுள்ளார். புதியபாதுகாப்புச்செயலாளர்மேஜர்ஜெனரல்கமல்குணரத்னநியமிக்கப்படவுள்ளார். இதனிடையே, நேற்றையறுவான்வெலிசாயவில்பதவிப்பிரமாணம்நிகழ்வினைத்தொடர்ந்துநாட்டுமக்களுக்காகஜனாதிபதிகோட்டாபயராஜபக்ஷஆற்றியஉரையின்போதுநிறைவேற்றுஅதிகாரத்தைப்பயன்படுத்துவதற்குதான்ஒருபோதும்பின்நிற்கபபோவதில்லைஎனக்குறிப்பிட்டார்.

வரலாற்றுரீதியானமக்கள்ஆணையைப்பயன்படுத்திதமதுகொள்கைக்குஅமையசெயற்படக்கூடியபுதியஅரசாங்கம்உருவாக்கப்படும்எனவும்ஜனாதிபதிகுறிப்பிட்டார். ஊழல்அற்றஅரசசேவை, புதியஅரசியல்கலாசாரம், அதுபோல்அரசபாதுகாப்புபொறிமுறைஎன்பனஉருவாக்கப்படும்எனஜனாதிபதிகோட்டாபயராஜபக்ஷகுறிப்பிட்டார்.

கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று சத்தியப்பிரமாணம் செய்ய உள்ளார்.

இலங்கை சோசலிச குடியரசின் ஏழாவது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ இன்றைய தினம் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

சத்தியப்பிரமாண வைபவம் ருவன்வெலிசாயவில் இன்று முற்பகல் இடம்பெறும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

இந்த சத்தியப்பிரமாண நிகழ்வைத் தொடர்ந்து அவர் நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றையும் ஆற்றவுள்ளார்.

நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி