உள்ளூர்

"குரலுக்கு வளம் - 2020" தேசிய நிகழ்ச்சித்திட்டம

“குரலுக்கு வளம் - 2020” தேசிய நிகழ்ச்சித்திட்டம

அறிமுகம் :
இலங்கை பூராகவூம் பரந்து காணப்படும் இயற்கையிலேயே  அறிவிப்புத்திறன் நிரம்பப்பெற்ற ஆயினும் சரியான வழிகாட்டுதல் இன்றிய நிலையில் இருக்கும் இளைஞர் யூவதிகளின் குரல் ஆளுமையினை அடையாளம் கண்டு சரியான அணுகுமுறையூ+டாக தேசிய மட்டத்திற்கு அறிவூஇ ஆற்றல்இ நிறைந்த அறிவிப்பாளர்களாக   வெளிக்கொணரச்செய்யூம்  தேசிய ரீதியால பெரும்  பணியே. குரலுக்கு வளம் - 2020 நிகழ்ச்சி திட்டமாகும்.
யாருக்காக : ?
18 - 30 வயதிற்கிடைப்பட்ட கல்வித்தகைமையினை முழுமைப்படுத்திக் கொண்டுள்ள பரிபூரண அறிவிப்பாளர்களாக வாழ்க்கையை வெற்றிகொள்ள காத்திருக்கும் எமது தேசத்தின் இளைஞர் யூவதிகளுக்காக எல்லா மொழிகளிலும் பேசக்கூடிய அனைத்து இனங்களையூம் பிரதிநிதித்துவம் செய்கின்ற வகையில் உருவாக்கப்படும் முழுமையான அறிவிப்பாளர்கள் வெறுமனே இலங்கை வானொலியின் வளமாக அன்றி நாட்டின் தேவைக்காக செயற்படும் வளம் நிறைந்தவர்களாக திகழ்வர்.
இதில் முக்கியத்துவம் இருக்கிறதா?
நாட்டில் பல்வேறு தொலைக்காட்சிஇ வானொலி அலைவரிசைகள் ஊடாக உடனடி அறிவிப்பாளர்கள் உருவாக்கப்படுகிறார்கள். அது பாராட்டத்தகுந்தது. ஆயினும் அண்மைய காலத்தில் இவ்வாறு உருவாகிய அறிவிப்பாளர்கள் தமது தொழில் சார்ந்த சரியான நிபுணத்துவம் இல்லாததால் இவர்களுக்கு  மக்கள் மனங்களில் நிலைத்திருக்க முடியாதிருக்கிறது. அனைத்து திறன்களும் மிகுந்த குரல் ஆளுமைகளுhடாக நாட்டை சரியான திசை நோக்கி செலுத்தவேண்டியதன் அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது. தேசிய ரீதியில் உணரப்பட்டுள்ள இத் தேவையினை பூர்த்தி செய்ய தேசிய ஒலிபரப்பாளர்களான நாம் திடசங்கற்பம் பூண்டுள்ளோம். அதுவே குரலுக்குவளம் 2020 நிகழ்ச்சியாகும்.
இதற்காக தேசிய வானொலி பங்கெடுத்தது ஏன்?
உலகின் 2 வது வானொலியாகவூம் ஆசியாவின் முதலாவது வானொலி நிலையமாகவூம் 1925 டிசம்பர் 16ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு திணைக்களமாக நிறுவப்பட்டு 1967ம் ஆண்டு கூட்டுத்தாபனமாக மாற்றம் பெற்று கடந்த 95 ற்கும் மேலான வருட காலம் இலங்கை மக்களின் அறிவூஇ இரசனைஇ திறன்இ மற்றும் எண்ணவிருத்தி ஆகியவற்றிற்காக இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் பங்கெடுத்திருக்கிறது. தேசிய வானொலியெனும் வகையில்  மக்களது வானொலியாக தன் பொறுப்பை நிறைவேற்றுவது இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின்  பிரதான கடமையாகும்.இலங்கை வானொலியானது இற்றைக்கு பல தசாப்தங்களுக்கு முன்பிருந்தே இச்செயற்பாட்டில் பங்கெடுத்திருந்தது. விஷேடமாக கடந்த  5 தசாப்தங்களாக இலங்கை வானொலியின் அறிவிப்பாளர்களை முழு நாடுமே பாசத்தால் பற்றியிருந்தது. அவர்கள் முழு நாட்டுமக்களுடனும் நெருக்கமானவர்கள் ஆயினர். நாடுமுழுவதும் நேயர்களினுடைய பாசக்குரலாகினர். அவர்கள் கொண்ட அறிவூஇ சரளமாக நிகழ்ச்சி படைக்கும் ஆற்றல் மற்றும்  நேர்த்தியாக மொழியை கையாண்டதனால் முழு நாடும் அவர்களை நேசிக்க காரணமாகினார்கள். அன்று அக் காற்றலை கலைஞர்கள் தமது  ஆற்றலில் பல்வகைமையினை கொண்டிருந்தனர்.
அக்குரல்கள் இன்று எம்மை விட்டு பிரிந்தாலும்  அவர்களின் குரல்கள் இன்றும் எம் மனதை விட்டகலவில்லை. அப்படியான சிரேஷ்ட ஒலிபரப்பாளர் சந்ததியினரை உருவாக்குவதென்பது இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்திற்கு உள்ள வரலாற்று கடமையாகும். இன்று நாட்டு மக்களினால் அதிருப்திக்குள்ளாகியூள்ள இவ் ஒலிபரப்பு கலையினை மீள கட்டியெழுப்புவதுஇ மற்றும் அவர்களை சரியான திசை நோக்கி எடுத்துச்செல்லும் தேசிய பணி இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தினாலேயே  மேற்கொள்ளப்படவேண்டியதொன்றாகும்.

இதற்காக நாம் கொண்டுள்ள பலம்

நாட்டின் எந்தவொரு வானொலி தொலைக்காட்சி நிலையத்திலும் கடமையாற்றுகின்ற பெயர் பெற்ற கணிசமான முன்னணி  அறிவிப்பாளர்கள் அறிவிப்புக்கலை பற்றிய ஆரம்ப படியினையை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலிருந்தே ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கு பல காரணங்கள் உண்டு. அறிவிப்புக்கற்கை பாடநெறியினூடாக முழுமையான அறிவிப்புக்கலை பற்றிய தௌpவை பெற்றுக்கொள்ளஇ பகுதி நேர அறிவிப்பாளராக இணைந்து தமது திறமையை விருத்தி செய்வதற்கு  என   இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் களம் அமைத்திருத்தலாகும்.  இச்செயற்பாட்டை மேற்கொள்ள நாம் கொண்ட சக்தி பாரியது.

1.     நாடுமுழுவதும் வலையமைப்பினை கொண்டுள்ள தேசிய அலைவரிசை கட்டமைப்பு.
2.    நாடுதழுவிய வகையில் நாம் கொண்டுள்ள பிராந்திய வானொலி சேவை கட்டமைப்பு.
    3.    திறன் வாய்ந்த  பணிக்குழாம்
    4.    ஒலிபரப்பு  உபகரணங்களுடன் கூடிய பயிற்சி நிலைய வசதி.
    5.    பல்வேறு வானொலி அலைவரிசைகளை கொண்டிருத்தல்.  
இப் பெரும் தேசிய  செயற்திட்டத்தில்
இலங்கையில் எப்பாகத்திலிருப்பினும் தகைமை நிரம்பப்பெற்றுள்ள எந்த ஒருவருக்கும் இதற்காக விண்ணப்பிக்க முடியூம்.
1.    18-30 இடைப்பட்ட வயதினராக இருத்தல் வேண்டும்.
2.    க பொ த (சாதாரண தரம்) க பொ த (உயர்தரம்) சித்தியடைந்திருத்தல் அவசியம்.
3.    ஆற்றல் (அடிப்படை திறன்)
விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளல்
இலங்கை ஒலிபரப்புக ;கூட்டுத்தாபன உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியூம்.
பிரதான காரியாலயம்இ ரஜரட்டைஇ யாழ் குஆ பிறை குஆஇ றுகுணு இ தம்பானைஇ வயம்பஇ ஆகிய பிராந்திய நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியூம்.

விண்ணப்பங்களை அனுப்பி வைத்தல்
•    சரியாக முழுமைப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை   பணிப்பாளர் நாயகம்இ இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்இ கொழும்பு - 07 எனும் முகவரிக்கு பதிவூத்தபாலில் அனுப்ப வேண்டும். கடித உறையின் இடது புற மேல் மூலையில் "குரலுக்கு வளம் - 2020" என குறிப்பிடப்படல் வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தை பிரதான காரியாலயம்இ
•    ரஜரட்டைஇ யாழ் குஆ இ பிறை குஆ இ றுகுணு தம்பானைஇ வயம்பஇ ஆகிய பிராந்திய நிலையங்களில் கையளிக்க முடியூம்.
•    ஈ-மெயில்; முகவாp :  மயவயாயனெயவயயசரவாயம2020@பஅயடை.உழஅ

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி திகதி
2020 மார்ச் 14ம் திகதி
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்பு குரல் தேர்வூ மற்றும் நேர்முக பரீட்சை தொடர்பில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் அறிவிக்கப்படும்.

மாதிhp விண்ணப்படிவம
www.slbc.lk/NM/SLBC-Katahandata-Aruthak-2020-Application-Form-Tamil.pdf