உள்ளூர்

ஆயிரம் பாடசாலை அபிவிருத்தி செய்யும் அரச வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை தெரிவு செய்யப்படும் பணிகள் இன்று முதல் ஆரம்பமாகும்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எதிர்கால நோக்கு கொள்கைப் பிரகடனத்தின் அடிப்படையில் சௌபாக்கிய நாடொன்றைக் கட்டியெழுப்பும் நோக்கில் நாடளாவிய ரீதியில் ஆயிரம் பாடசாலைகளை விருத்தி செய்யும் வேலைத்திட்டம் ஒன்று கல்வி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது. இதனடிப்படையில் ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் பாடசாலை தெரிவு செய்யப்பட்டு அந்தப் பாடசாலைக்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும் அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படும். இதற்கிணங்க பாடசாலைகளைத் தெரிவு செய்யும் பணிகள் தொடர்பான விசேட பேச்சுவார்த்தை இன்று முதல் ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.எம்.ரத்னாயக்க தெரிவித்தார்.