உள்ளூர்

சுவிற்சர்லாந்து தூதரக அதிகாரி, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நேற்று வாக்குமூலம்.

கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சுவிற்சர்லாந்து தூதரக அதிகாரி, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

நேற்று மாலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அவர் முகத்தை மூடிய வண்ணம் வருகை தந்து, வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

குறித்த பெண் கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இவரைச் சிலர் கடத்தியதாகக் குறிப்பிடப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில், வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

தூதரக தகவல்களுக்கும், விசாரணையில் கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுவதாக அதில் குறிப்பிடபபட்டுள்ளது.