உள்ளூர்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க தயார் என ஜனாதிபதி ஹிந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகைக்குக் குறிப்பிட்டுள்ளார்

தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹிந்துஸ்தான் ரைம்ஸ் செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
இலங்கை சுதந்திரமடைந்தது முதல் தமிழ் அரசியல்வாதிகள் அதிகாரப்பகிர்வு குறித்தே பேசியதாகவும் மாறாக அவர்கள் மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவில்லை எனவும் கூறினார்.
இலங்கை அரசியல் அமைப்பில் தற்போதும் 13 ஆவது திருத்தம் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் சொல்லப்பட்டுள்ள பல பிரிவுகளை எம்மால் நடைமுறைப்படுத்த முடியாது. ஆகவே, எமக்கு சில மாற்றங்கள் தேவை. இது குறித்து தமிழ் அரசியல் தலைவர்களும் விளங்கிக்கொள்ள வேண்டும் எனவும ஜனாதிபதி குறிப்பிட்டார்.
முன்னைய அரசாங்கம் புதிய அரசியல் யாப்பு சட்டமூலம் ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுத்தது. பெரும்பான்மை மக்களின் இணக்கம் இன்றி எந்தவொரு தீர்வையும் வழங்க முடியாது என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். பெரும்பான்மை மக்களிடத்தில் ஏதேனும் சந்தேகத்திற்குரிய விடயங்களை முன்வைத்தால் அவற்றை நடைமுறைப்படுத்த முடியாது. அதுவே யதார்த்தம். பெரும்பான்மை மக்களை தெளிவுப்படுத்தினால் அதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட போவதில்லை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஹிந்துஸ்தான் பத்திரிகைக்கு குறிப்பிட்டுள்ளார்.