உள்ளூர்

அரச நிறுவனங்களுக்கு திறமையான அதிகாரிகளை நியமிக்க ஆறு பேர் கொண்ட குழு ஜனாதிபதியால் நியமனம்

அரச நிறுவனங்கள், அரச சார்பு நிறுவனங்கள் என்பனவற்றின் உயர் பதவிகளுக்கு தகுதி வாய்ந்தவர்களை நியமிப்பதற்காக பரிந்துரை செய்யும் ஆறு பேர் கொண்ட தொழில்வாண்iமாளர் குழு நியமிக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட அரச அதிகாரியான சுமித் அபேயசிங்க குழுவின் தலைவராவார். சுசந்த ரட்னாநாயக்க, கலாநிதி நாலக கொடஹேவா, டயஸ் கோமஸ், பிரசன்ன குணசேன, ஜகத் வெல்லவத்த, ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினாக்ளாவர். அடுத்த மாதம் 18 ஆம திகதிக்கு முன்னர் இது தொடர்பான பரிந்துரைகளை அனுப்புவது அவசியமாகும்.