உள்ளூர்

ஜனாதிபதியின் இந்தியாவுக்கான விஜயம் இன்று ஆரம்பம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இந்தியாவுக்கான விஜயத்தை இன்று ஆரம்பிக்கின்றார். இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இன்று மாலை அவர் இந்தியாவுக்கு புறப்பட்டுச் செல்வார்.

இதன் போது, இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட இந்திய பிரமுகர்களுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாக தெரிவானதன் பின்னர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பி ஜயசுந்தர, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவினாத்த ஆரியசிங்க, திறைசேரியின் செயலாளர் சஜித் ஆட்டிகல, ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க, ஜனாதிபதியின் அந்தரங்கச் செயலாளர் சுகீஸ்வர பண்டார ஆகியோரும் ஜனாதிபதியுடன் செல்லவுள்ளனர்.