உள்ளூர்

நாட்டில் அறிவார்ந்த ஊடகக் கலாசாரம் கட்டியெழுப்பப்படும் என புதிய ஊடக அமைச்சர் உறுதி அளித்துள்ளார்

நாட்டில் அறிவார்ந்த ஊடகக் கலாசாரம் கட்டியெழுப்பப்படும் என தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், உயர்கல்வி, தொழில்நுட்ப புத்தாக்க மற்றும் ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று முற்பகல் ஊடக அமைச்சில் தனது கடமைகளை ஆரம்பித்த அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சகல இனங்களுக்கும், ஆத்மார்த்தமாக வாழ்வதற்கான உரிமை நாட்டில் கட்டியெழுப்புவதற்கான ஊடகக் கலாசாரத்தை நாட்டிற்கு தற்போதைய அரசாங்கம் அறிமுகப்படுத்தும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஊடக சுதந்திரம் உயர்ந்தபட்சம் பாதுகாக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.