உள்ளூர்

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பிரதமராக பதவியேற்கின்றார்

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பிற்பகல் 1.00 மணிக்கு பிரதம மந்திரியாக பதவியேற்க உள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் பிரதமராகப் பதவியேற்பார். அதனைத் தொடர்ந்து பிற்பகல் 3.00 மணிக்கு பிரதமர் அலுவலகத்தில் திரு.மஹிந்த ராஜபக்ஷ தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்க உள்ளார். நாளை பிற்பகல் அல்லது வெள்ளிக்கிழமை முற்பகல் புதிய அமைச்சரவையும் பதவியேற்க உள்ளது.

இதேவேளை, பாராளுமன்றத்தின் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று காலை நடைபெறும். இன்று காலை 11.00 மணிக்கு கட்சித் தலைவர்கள் சந்திப்பை கூட்டுமாறு சபாநாயகரினால் பாராளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக்கவுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பாராளுமன்றத்தினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.